Detoxification: இயற்கை பானங்கள்... உடல் நச்சுகள் வெளியேற நச்சுனு டிப்ஸ்

By maria pani  |  First Published Dec 30, 2022, 3:01 PM IST

நம் உடலில் காணப்படும் நச்சுகளை சரியான நேரத்தில் வெளியேற்றாமல் இருந்தால் பல உடல் நல சிக்கல்களை சந்திக்க நேரிடும். 


உங்கள் உடலில் நச்சு நீக்கம் எளிதானது அல்ல. ஆனாலும் அது மிகவும் கடினமான விஷயமும் இல்லை. நாம் உண்ணும் உணவானது முறையாக வெளியேறாமல் இருந்தால் செரிமானக் கோளாறு முதல் மலச்சிக்கல் வரை ஏற்படலாம். இதனை எளிய முறைகளில் வெளியேற்ற முடியும். உணவே மருந்து என்ற வாக்கின் படி, உணவுகளாலேயே கூட இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். 

நச்சு நீக்கம் எனும் டிடாக்சிபிகேஷன்! 

Latest Videos

undefined

நச்சு நீக்கம் என்பது உடலில் உள்ள அசுத்தங்களை அகற்றி இயல்பான நிலைக்கு மீட்டெடுப்பதாகும். அழகு மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையே நச்சு நீக்கம் தான். புகைப்பிடித்தல், போதை மருந்துகள் முதலியவற்றை தவிர்க்க வேண்டும். 

ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழித்ததும் வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து அருந்தினால் கழிவு வெளியேறும். இதனால் நச்சுகள் அகலும். வயிற்றுப்புண் இல்லாதவர்கள் காலையில் இஞ்சியை நன்கு அரைத்து அந்த சாறை அருந்தினால் குடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். முழு நெல்லிக்காயுடன் கொஞ்சம் இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றினால் 5 நன்மைகள் ஏற்படும். 

உணவு மூலம் நச்சுகளை எப்படி வெளியேற்றலாம்? 

சர்க்கரை சேர்ந்த பானங்களை அதிகம் எடுத்து கொள்வதை தவிருங்கள். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. உடல் எடை அதிகரிப்பதற்கும், இதயம் சார்ந்த நோய்கள், புற்றுநோய், நீரிழிவு நோய் ஏற்படவும் இந்த உணவு பழக்கம் காரணமாக உள்ளது. 

இதையும் படிங்க; குழந்தை ஊனமாக பிறக்குமா? குங்குமப்பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூகம்பம்!

இயற்கை பானங்களை அருந்துங்கள்! 

பழச்சாறுகளின் பெயரில் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட பானங்களை தவிர்த்துவிட்டு இயற்கை பானங்களை அருந்துங்கள். செயற்கையாக தயாரிக்கப்படும் பானங்களில் ப்ளேவர்கள், நிறமூட்டிகள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடும். கேரட் உடன் இஞ்சி சிறிதளவு, மஞ்சள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நன்றாக வடிகட்டி அருந்தலாம். இதனுடன் தேங்காய் பால் அல்லது நீர் சேர்த்துக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து அருந்தி வந்தாலே நச்சுக்கள் வெளியேறும். நச்சு வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

உடல் எடை குறையும்! 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நச்சு நீக்கம் நல்ல பலனளிக்கும். நச்சு நீக்கம் முறையாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உள் உறுப்புகளை நன்றாக பராமரிக்க உதவும். நச்சு முறையாக வெளியேறாமல் இருந்தால் உடலிலேயே தங்கும். இதனால் உறுப்புகள் விரைவில் சேதமாகும். 

உள் உறுப்புகளை பராமரிக்கும் 

நமது உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால் உறுப்புகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக காணப்படும். 

இளமையாக இருக்க வாய்ப்பு 

ஆரோக்கியமான உணவு முறை சரும பராமப்பிற்கு முதன்மை காரணமாக உள்ளது. நச்சுக்களை முறையாக வெளியேற்றும் வகையில் நார்ச்சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் சருமம் பொலிவாக காணப்படும். முடி உதிர்வு குறையும். நல்ல சுவாசம் கிடைக்கும். 

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்! 

உடலில் உள்ள நச்சுக்களை முறையாக வெளியேற்றினால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். நச்சுகள் தினமும் முறையாக வெளியேறும்போது உள்ளுறுப்புகள் கழிவு நீக்கம் தவிர மற்ற வேலைகளை கவனித்து கொள்ளும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இதையும் படிங்க: Headache: உடற்பயிற்சி.. இஞ்சி டீ... ஒரு நொடியில் பறந்து போகும் தலைவலி!

click me!