வாருங்கள்! குட்டிஸ்களுக்கு பிடித்த பன்னீர் சீஸ் பிட்ஸாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் அனைவரும் பிட்சாவை வெளியில் கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைத்து இருப்போம்.வெளியில் வாங்குவதால் அதன் விலையோ மிக காஸ்டலியாகவும் அதே நேரத்தில் மைதாவில் செய்ய பட்டு இருக்கும். அதனையே நாம் வீட்டில் செய்தால் அதிக எண்ணிக்கையிலும் செய்யலாம் மேலும் ஆரோக்கியத்தை தரும் கோதுமை மாவினை பயன்படுத்தியும் செய்யலாம் .
வழக்கமாக நாம் கோதுமை மாவினை வைத்து சப்பாத்தி, தோசை ,புட்டு என்று பல விதமான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் ருசியான பிட்சாவை செய்ய உள்ளோம். அதுவும் அதில் சீஸ்,பன்னீர், கார்ன் போன்றவற்றை டாப்பிங் செய்து சூப்பரான பிட்சாவை செய்து கொடுத்தால் குட்டிஸ்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
undefined
வாருங்கள்! குட்டிஸ்களுக்கு பிடித்த பன்னீர் சீஸ் பிட்ஸாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பிட்சா பேஸ் செய்வதற்கு:
கோதுமை மாவு - 1 1/2 கப்
ஈஸ்ட் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
உப்பு - 1/2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 1/2 ஸ்பூன்
டாப்பிங் செய்வதற்கு:
பன்னீர் - 1/4 கப்
சீஸ் - 1/4 கப்
கேப்ஸிகம் - 1/4 கப்
ஸ்வீட் கார்ன்-1/4 கப்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
ஆரிகனோ - 1/4 ஸ்பூன்
பிட்சா சாஸ் - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 1/2
ஆரிகனோ - தேவையான அளவு
சில்லி ப்ளேக்ஸ் - தேவையான அளவு
வட இந்திய ஸ்டைலில் ஆரோக்கியமான "வெஜ் சப்ஜி" ! இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!
செய்முறை:
முதலில் பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். கேப்ஸிகம் மற்றும் வெங்காயத்தை மீடியம் சைஸில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் விலாசமான தட்டில் கோதுமை மாவு சேர்த்து அதில் இந்த தண்ணீரை ஊற்றி கொஞ்சம் சஃப்ட்டாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின்பு மாவினை மூடி விட்டு சுமார் 2 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரம் பிறகு ,பிசைந்த மாவை இரண்டாக பிரித்து வைத்துக் கொண்டு,1 பகுதியை பிட்சாவின் பேஸாக தேய்த்துக் கொண்டு ஒரு ஃபோர்க் வைத்து பேஸில் ஆங்காங்கு ஹோல் செய்ய வேண்டும்.
ஓவனை 150 டிகிரி செல்சியஸில் 10 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை சேர்த்து அதில் மிளகுத் தூள், டொமேட்டோ சாஸ், ஆரிகனோ ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் விட்டு ஸ்ப்ரெட் செய்து விட்டு பின் லேசாக கோதுமை மாவைத் தூவ வேண்டும். அதன் மேல் தேய்த்து வைத்துள்ள பிட்சா பேஸை வைத்து, ஓவனில் ட்ரேயை சுமார் 8 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும்..பிட்சா பேஸ் ரெடி!
இப்போது இதன் மேல் சிறிது பாலை ஸ்ப்ரெட் செய்து அதன் மேல் பிட்சா சாஸ் விட்டு நன்கு ஸ்ப்ரெட் செய்து விட்டு, ஓவனை 200 டிகிரி செல்சியஸின் வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு சூடேற்ற வேண்டும். பின்பு பிட்சா பேஸ் மேல் துருவி வைத்துள்ள சீஸ் தூவி அதன் மேல் வெங்காயம்,கேப்ஸிகம்,ஸ்வீட் கார்ன் மற்றும் பன்னீர் துண்டுகளை தூவ வேண்டும்.
இறுதியாக ஓவனில் பிட்சாவை 5 நிமிடம் வைத்து எடுத்தால், ருசியான பன்னீர் சீஸ் பிட்சா ரெடி!!!பின் ஆரிகனோ மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.