வாருங்கள்! ருசியான முள்ளங்கி பருப்பு பச்சடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அதிக அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.நாம் பெரும்பாலும் ஒரு சில காய்கறிகள் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், கேரட், பீன்ஸ், கோஸ், முருங்கை, பட்டாணி, உருளைக் கிழங்கு போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு வருகிறோம்.
ஆனால் அதனை தவிர்த்து முள்ளங்கி, சவ் சவ், பீர்க்கங்காய், கோவக்காய், பாகற்காய் என்று இன்னும் பல்வேறு காய்கறிகளை பெரும்பாலும் நாம் அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த வகையில் இன்று நாம் முள்ளங்கி வைத்து ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக முள்ளங்கி வைத்து சாம்பார் தான் செய்து இருப்போம்.
undefined
இன்று நாம் முள்ளங்கி வைத்து ருசியான பச்சடி செய்ய உள்ளோம். இது புல்கா, சப்பாத்தி போன்றவற்றிக்கு தொட்டு சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். வாருங்கள்! ருசியான முள்ளங்கி பருப்பு பச்சடியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி - 2
கெட்டி தயிர்-100 மில்லி
பாசிப்பருப்பு -50 கி
வெங்காயம்-1
பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-1 கொத்து
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற "கோதுமை சேமியா கிச்சடி"!
செய்முறை :
முதலில் முள்ளங்கியை அலசி விட்டு பின் அதன் தோலினை எடுத்து விட்டு துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் பாசிப்பருப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
1 மணி நேரம் கழித்து பாசிப்பருப்பினை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் துருவிய முள்ளங்கி, ஊறிய பாசிப்பருப்பு, பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள்ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
இப்போது பௌலில் இருக்கும் முள்ளங்கியில் தாளித்தவற்றை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டு இறுதியாக கெட்டி தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக இதனில் மல்லித்தழையை தூவி பரிமாறினால் முள்ளங்கி பருப்பு பச்சடி ரெடி!