சளி இருமலுக்கு அருமருந்து துளசி ரசம்.. எப்படி செய்யணும் தெரியுமா?

Published : Jul 20, 2024, 01:57 PM ISTUpdated : Jul 20, 2024, 02:16 PM IST
சளி இருமலுக்கு அருமருந்து துளசி ரசம்.. எப்படி செய்யணும் தெரியுமா?

சுருக்கம்

 Tulsi Rasam Recipe : மார்பு சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த துளசியில் ரசம் செய்வது சாப்பிடுங்கள். 

தற்போது கோடை வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் தலைவலி, தலைபாரம் என தொடர்ந்து மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். இவற்றில் இருந்து விடுபடவும், இவை வராமல் தடுக்கவும் துளசி அருமருந்தாக செயல்படுகிறது. துளசி பல நோய்களையும் தீர்க்கும் என்பதால், அது கிடைக்கும் போது வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.   

துளசியில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது. துளசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால்,  இருமல், காய்ச்சல், மார்பு சளி போன்றவற்றிற்கு அருமருந்தாகும். எனவே, நீங்கள் துளசியில் ரசம் செய்து அதை வாரம் ஒரு முறை சாப்பிடுங்கள். ஆரோக்கியத்திற்கு நல்லது.  முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த ரசம் ரொம்பவே நல்லது. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் துளசியில் ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இந்த மாதிரி ஸ்ரீலங்கா ரசம் செய்தால் சும்மாவே குடித்து காலி ஆக்கிடுவாங்க!

துளசி ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

துளசி இலைகள் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  சும்மா ஒரே மாதிரி ரசம் செய்யாம ஒரு தடவ கமகமன்னு வாசனை வரும் வாழை இலை வைத்து ரசம் செய்து சாப்பிடுங்க!

செய்முறை:

  • துளசி ரசம் செய்ய முதலில் துளசி இலைகளையும் கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
  • பிறகு புளியையும் ஊறவைத்து, அதை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் உப்பு பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பின் எடுத்து வைத்த மிளகு சீரகம், கொத்தமல்லி விதை துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை புளிக்கரைசலுடன் கலக்கவும். 
  • இப்போது இதை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அதில் அரைத்து வைத்த திசு துளசியையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். நுரை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது ஒரு கடையை அடைப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, ரசத்தில் ஊற்றவும். அவ்வளவுதான் டேஸ்டான துளசி ரசம் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!