Meal Maker Dosa : இந்த கட்டுரையில் மீன் மேக்கரை வைத்து மொருமொருப்பான தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் தேசை சுடுவதற்கு மாவு இல்லையா? என்ன செய்வது என்று தெரிவதில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டில் மேல் மேக்கர் இருந்தால், அதில் டேஸ்டான தோசை சுட்டு சாப்பிடுங்கள். இந்த மீல்மேக்கர் தோசை ஆனது, ரவா தோசை போலவே சாப்பிடுவதற்கும் மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தோசை செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் மீன் மேக்கரை வைத்து மொருமொருப்பான தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்க குழந்தை வாழைப்பழம் சாப்பிட மாட்டேங்குதா..? அப்ப இப்படி தோசை செஞ்சு கொடுங்க.. தட்டு காலியாகும்!
மீல்மேக்கர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 1 கப்
கோதுமை மாவு - 3 ஸ்பூன்
ரவை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சின்னது
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 7 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் - 4
கசூரி மெத்தி - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: தோசை மாவு இல்லையா? அப்ப ரவையும் தேங்காயும் வச்சு இப்படி ஒருமுறை தோசை சுட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கும்!
செய்முறை:
மீல்மேக்கர் தோசை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, எடுத்து வைத்த மீல்மேக்கர், காஷ்மீரி மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைத்து சுமார் இரண்டு நிமிடம் அப்படியே வைக்கவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மீல்மேக்கர், வரமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரை இந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் கோதுமை மாவு, சீரகம், பூண்டு மிளகுத்தூள், கசூரி மெத்தி, கொத்தமல்லி இலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு துளசி மாவு தண்ணீரையும் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அது சூடானதும், அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து அதில் ஊற்றவும். மாவி சித்தி என்னை ஊற்றிக் கொள்ளுங்கள் பிறகு இரண்டு பக்கமும் திரட்டி போட்டு வேக வைத்து எடுத்தால் டேஸ்டான மீல்மேக்கர் தோசை ரெடி. இந்த தோசையுடன் நீங்கள் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D