Karuvattu Kulambu Recipe : இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
சிலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு மீது தான் அலாதி பிரியம். அதுவும் குறிப்பாக, அந்த கருவாட்டு குழம்பை மறுநாள் வைத்து சாப்பிட்டால், அதன் சுவை வேற லெவலாக இருக்கும். முக்கியமாக, கிராமப்புறங்களில் வைக்கப்படும் கருவாட்டுக் குழம்புக்கு மவுசு அதிகம் தான். அதிலும் நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கப்படும் கருவாட்டுக் குழம்பு பற்றி சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: கிராமத்து ஸ்டைலில் இப்படி ஒரு முறை முட்டை குழம்பு செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்..!
கருவாட்டுக் குழம்பு செய்ய தேவையான அளவு:
கருவாடு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 25 (நறுக்கியது)
தங்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 15
புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: கிராமத்து மண் வாசனையுடன் மண் சட்டியில் கோழிக்கறி குழம்பு!
செய்முறை:
கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்ய முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்க்கவும். பிறகு ஒரு தட்டை வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.
மறுபுறம், அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அலசி வைத்த கருவாட்டை போட்டு ஒரு நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது பத்து நிமிடம் கழித்து குழம்பு மூடியை திறந்து, வறுத்து வைத்த கருவாடை அதில் எண்ணெயுடன் சேர்த்து அப்படியே போடுங்கள். கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் ருசி பார்த்து தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D