ஐயங்கார் ஸ்டைலில் டேஸ்டான புளியோதரை.. ரெசிபி இதோ..!

Published : Jul 18, 2024, 02:57 PM ISTUpdated : Jul 18, 2024, 03:06 PM IST
ஐயங்கார் ஸ்டைலில் டேஸ்டான புளியோதரை.. ரெசிபி இதோ..!

சுருக்கம்

Iyengar Puliyodharai Recipe : இந்த பதிவில் ஐயங்கார் ஸ்டைலில் வீட்டிலேயே புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புளியோதரை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் ஐயங்கார் புளியோதரை என்றால் சொல்லவே வேண்டாம். சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். புளியோதரை கோவில்களில் வழங்கப்படும்.

உங்களுக்கு தெரியுமா.. தூர பிரயாணம் செய்பவர்கள் இதை கட்டுச்சோறாக எடுத்துச் செல்வார்கள். காரணம் இது அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. புளியோதரையை குழந்தைகளுக்கு மதியம் உணவிற்கு டிபன் பாக்ஸில் அடைத்தும் கொடுக்கலாம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு சுவையாக செய்வதற்கு உதவும் சுலபமாகவும் இருக்கும்.  சரி வாங்க இப்போது இந்த பதிவில் அய்யங்கார் ஸ்டைலில் வீட்டிலேயே புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஐயங்கார் புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
வேர்க்கடலை - 2 ஸ்பூன் (தோல் நீக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நாட்டு சக்கரை - 1 ஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு ( கரைசல்
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஐயங்கார் ஸ்டைலில் ருசியான வத்தல் குழம்பு.. ரெசிபி இதோ..!

பொடி செய்ய..
கடலை பருப்பு - 1 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மல்லி - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2 
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்

இதையும் படிங்க:  வீடே மணக்கும் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் சாம்பார்.. ரெசிபி இதோ!

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி, வரமிளகாய் வெந்தயம், எள் ஆகியவற்றை  சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி, நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் எழுத்து வைத்த புளியை அரைக்கப் தண்ணீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைத்து அதிலிருந்து சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து மற்றொரு கடையை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் உப்பு மற்றும் புளி சாற்றினை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு சுமார் 15 நிமிடம் கொதிக்க விடுங்கள். பின் அதில் நாட்டு சர்க்கரையும் சேர்த்து கிளறிவிடுங்கள். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி விடுங்கள். பின் தயாரித்து வைத்த பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு கிளறி விட்டு முப்பது நிமிடம் மூடி வைத்து, பிறகு சாப்பிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான ஐயங்கார் புளியோதரை தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

பானிபூரி சாப்பிட முயன்ற பெண் திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு.. ஷாக்கிங் வீடியோ!
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!