Oats Upma Recipe : இந்த கட்டுரையில் நாம் ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலரும் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். ஓட்ஸ் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல சர்க்கரை நோயாளிகளுக்கும் ஓட்ஸ் ரொம்பவே நல்லது. பொதுவாகவே, ஓட்ஸில் பல வகையான ரெசிபிகள் செய்யலாம். அந்த வகையில், இன்று காலை பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஒரு ரெசிபி பற்றி பார்க்கலாம். அதுதான் ஓட்ஸ் உப்புமா. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் நாம் ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!
ஓட்ஸ் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ராத்திரி அவிச்ச இட்லி மீதி இருக்கா?! காலை டிபனுக்கு இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க!
செய்முறை:
ஓட்ஸ் உப்புமா செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், எடுத்து வைத்த ஓட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து, பின் அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் பொடியாக நறுக்கி வைத்த கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது, இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் வறுத்து வைத்த ஓட்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, பிறகு ஒரு மூடியை வைத்து மூடி வையுங்கள். சிறிது நேரம் ஆவியில் அப்படியே வேக வையுங்கள். ஓட்ஸ் உப்புமா ரெடியான பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி பரிமாறுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் சத்தான ஓட்ஸ் உப்பும்மா ரெடி..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D