ஈவினிங் ஸ்நாக்ஸிக்கு சத்தான வாழைப்பூ வடை.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jul 19, 2024, 6:17 PM IST

இந்த பதிவில் வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


ஈவினிங் டைம்ல உங்கள் வீட்டில் உள்ளவர்கள் டீ, காபிக்கு ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் வடை செய்து கொடுங்கள். அதுதான் டீ காபியுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். வடையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றே தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். உங்கள் வீட்டில் வாழைப்பூ இருந்தால், அதில் வடை செய்து கொடுங்கள். இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக, இந்த வாழைப்பூ வடை செய்வது மிகவும் ஈஸி. மேலும், இது ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க இப்போது இந்த பதிவில் வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் முருங்கைக்கீரை வடை... ரெசிபி இதோ..!

Tap to resize

Latest Videos

வாழைப்பூ வடை செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கிலோ 
இஞ்சி - 1 சின்ன துண்டு
பூண்டு - 4
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  மதியம் மிச்சமான சாதம் இருக்கா?!மொறுமொறுப்பாக இப்படி வடை செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ.. !

செய்முறை:

வாழைப்பூ வடை செய்ய முதலில், கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், பிறகு அதில் வாழைப்பூ, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, இஞ்சி, பூண்டு கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பெருங்காயத்தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்று சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து கையில் தட்டி அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான வாழைப்பூ வடை ரெடி..

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!