Aadi Koozh : வீட்டிலேயே ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆடி மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், பெண்கள் அனைவரும் இம்மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். மேலும் இந்த மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவுகளை படைப்பது வழக்கம் அவற்றில் ஒன்றுதான் கூழ். ஆம், ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, வீட்டிலேயே ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழ் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Aadi Koozh Festival in Tamil : ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா?
undefined
கூழ் செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
தயிர் - 1 கப்
சின்ன வெங்காயம் - 7 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 5 கப்
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: Aadi Month | ஆடி மாசம் தொடங்கியாச்சு! மதுரை அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் டூர் போலாமா? முழு தகவல் இதோ..!
செய்முறை:
கூழ் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த கேழ்வரகு மாவு உப்பு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் வராமல் நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டியை கொண்டு நன்கு கிளறிக் கொண்டு இருக்கவும். கெட்டியான பதத்திற்கு வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின் அதை நன்கு குளிர வைக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் இப்போது ருசியான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு கூழ் தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D