பாலக்கீரை பிரியாணி சாப்பிடலைன்னா ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. செமையா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Aug 29, 2024, 2:59 PM IST

Palak Keerai Biryani Recipe : இந்த கட்டுரையில் பாலக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் எப்போதாவது கீரையில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.

ஆம், இன்றைய கட்டுரையில் நாம் பாலக்கீரையில் பிரியாணி செய்வது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம். பொதுவாகவே, இந்த பாலக்கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்கும். 

Latest Videos

undefined

அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும் மற்றும் இது எலும்புகளை உறுதியாக வைக்க உதவுகிறது. முக்கியமாக, இந்த கீரை புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் பாலக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

பாலக்கீரை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 1 பெரிய கட்டு
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 4 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (கீறியது)
பச்சை பட்டாணி - 100
பட்டை - 1
இலவங்கம் - 6
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
 நெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெரும்சீரகம் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை சேமியா பிரியாணி!

செய்முறை :

  • பாலக்கீரை பிரியாணி செய்ய முதலில் அரிசியை நன்கு கழுவி, பிறகு அதை சுமார் 80% வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கீரையை நன்கு கழுவி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் இலவங்கப்பட்ட, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
  • பிறகு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது அதில் கீரை விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். 
  • சிறிது நேரம் கழித்து அதில் ஏற்கனவே சமைத்து வைத்த அரிசியை போட்டு ஒருமுறை கிளறி விடுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பாத்திரத்தை மூடி வையுங்கள். பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து மறுபடியும் ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான பலாக்கீரை பிரியாணி ரெடி.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!