Cheeni Paratha Recipe : குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமான சீனி பரோட்டா செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி அல்லது தோசை தான் செய்து கொடுக்கப் போறீங்களா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரோட்டா பிடிக்குமானால், பரோட்டா செய்து கொடுங்கள். என்ன பரோட்டாவா? அது ஆரோக்கியத்திற்கு கெடுதானே என்று நினைக்கிறீர்களா? ஆனால், நான் உங்களுக்காக இந்த பதிவில் கொண்டுவந்துள்ள பரோட்டா அப்படி அல்ல. அது ஆரோக்கியமானது. சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். அது வேற ஏதும் இல்லைங்க சீனி பரோட்டா தான்.
நம்மில் பல இந்த பரோட்டாவை குழந்தை பருவத்தில் இருக்கும் போது சாப்பிட்டு இருப்போம். குழந்தைகள் மத்தியில் இது மிகவும் பிரபலமான காலை உணவு என்பதால் கண்டிப்பாக ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க இப்போது சுவையான சீனி பரோட்டா செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
undefined
இதையும் படிங்க: உங்க வீட்ல முட்டையும் கோதுமை மாவும் இருக்கா..? ருசியான சுவையில் டிபன் ரெடி.. ரெசிபி இதோ!
சீனி பரோட்டா செய்ய தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
பால் - தேவையான அளவு
இதையும் படிங்க: எத்தனை நாளைக்கு தான் காலையில இட்லி தோசை சுட்டு சாப்பிடுவீங்க?! ஒருமுறை 'இந்த' ரெசிபியை செஞ்சி பாருங்க..
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றை போட்டு பால் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தை ஒரு தட்டால் மூடி, சுமார் 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டை வடிவில் உருட்டி அதன் மேல் சர்க்கரை பரப்பி, பிறகு அதை சாதாரண பரோட்டா அளவுக்கு உருட்டி கொள்ளுங்கள். இப்போது ஒரு தவறை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய் தடவி பரோட்டாவை இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேக வைத்து எடுக்கவும் அவ்வளவுதான் சுவையான சீனி பரோட்டா தயார். இந்த பரோட்டாவை அப்படியே சாப்பிடலாம் விரும்பினால், தயிருடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D