Kambu Roti Recipe : காலை உணவாக சத்தான ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் கம்பு ரொட்டி செய்து சாப்பிடுங்கள். ரெசிபி உள்ளே.
எப்போதும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில், அதுவும் ஆரோக்கியமாக ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. உங்கள் வீட்டில் கம்பு மாவு இருக்கிறதா? அப்படியானால் அதில் சுவையான ரொட்டி செய்து சாப்பிடுங்கள். இந்த கம்பு ரொட்டி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவாக இது செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க..இப்போது இந்த கட்டுரையில் கம்பு ரொட்டி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்க வீட்ல சுரைக்காய் இருந்தா ஒன் டைம் சப்பாத்தி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்!
undefined
கம்பு ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வேர்கடலை - 2 ஸ்பூன் (வறுத்தது)
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: டின்னருக்கு இப்படி கைமா வெஜ் சப்பாத்தி செய்ங்க! எவ்ளோ செய்தாலும் டக்குனு எல்லாமே காலி ஆகி விடும் !
செய்முறை :
கம்பு ரொட்டி செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைக்கவும். அரைத்த இந்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கம்பு மாவு, கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் வேர்க்கடலை தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். ரொட்டி பாதத்திற்கு பிசைய வேண்டும். பிசைந்த மாவில் சிறிதளவு எடுத்து தட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பேனை அடுப்பில் வைத்து அச்சு சூடானதும் அதில் எண்ணெய் தடவி தட்டி வைத்த மாவை போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு ரொட்டி ரெடி. இந்த கம்பு ரொட்டியுடன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஏதாவது கிரேவி வைத்து சாப்பிடுங்கள், சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D