வீட்ல பிரட் இருக்கா? அப்ப குழந்தைகளுக்கு இப்படி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

Published : Aug 27, 2024, 05:15 PM ISTUpdated : Sep 17, 2024, 04:50 PM IST
வீட்ல பிரட் இருக்கா? அப்ப குழந்தைகளுக்கு இப்படி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!

சுருக்கம்

Bread Pakoda Recipe : மாலை வேளையில் டீ காபிக்கு ஸ்னாக்ஸாக பிரட் பக்கோடா செய்து சாப்பிடுங்கள். ரெசிபி இங்கே.

மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகள் ஸ்நாக்ஸாக ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பிரட் இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த பிரட்டில் சுவையான பக்கோடா செய்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பிரட் பக்கோடா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஈவினிங் நேரத்தில் டீ, காபி உடன் இதை வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடும் வகையில் இதன் சுவை இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் பிரட் பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  மாலை நேர சிற்றுண்டியாக "கத்தரி பக்கோடா" ..பச்சை சட்னியுடன் உண்டு மகிழுங்கள்..!!

பிரட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் :

பிரட் - 10
பெரிய வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 7
இஞ்சி - 1 துண்டு
அரிசி மாவு - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு  (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு  (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  இட்லி மாவு வைத்து மொறுமொறு ரிப்பன் பக்கோடா செய்யலாம் வாங்க!

செய்முறை :

பிரட் பக்கோடா செய்ய முதலில், எடுத்து வைத்த இஞ்சி பூண்டை இடித்துக் கொள்ளுங்கள். பிறகு பிரட் துண்டுகளை தண்ணீரில் பிரட்டி போட்டு பிறகு அதிலிருந்து  தண்ணீரைப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரிசி மாவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் பிசைந்து வைத்த மாவை சிறிதளவு போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான பிரட் பக்கோடா ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!