இட்லி, தோசைக்கு இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க!

Published : Aug 27, 2024, 06:30 AM IST
இட்லி, தோசைக்கு இப்படி ஒருமுறை சட்னி செஞ்சு கொடுங்க.. எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவாங்க!

சுருக்கம்

Poondu Kara Chutney Recipe : இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு கார சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வது என்று தெரியவில்லையா? தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என ஒரேமாதிரியாக செய்து சாப்பிடாமல், ஒருமுறை பூண்டு காரச் சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவே இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சட்டினியை செய்து கொள்ளுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பூண்டு கார சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குட்டீஸ்கள் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறார்களா? இப்படி சட்னி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

பூண்டு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

பூண்டு - 25
வர மிளகாய் - 10
காஷ்மீர் வரமிளகாய் - 5
தக்காளி - 2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  5 நிமிடத்தில் இட்லி தோசைக்கு டேஸ்டான புதினா சட்னி.. இப்படி அரைச்சு பாருங்க.. வெறுமனே சாப்பிடுவீங்க!

செய்முறை :

பூண்டு கார சட்னி செய்ய முதலில் மிக்ஸி ஜாரில் பூண்டு, வர மிளகாய், காஷ்மீர் வர மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு மையாக அரைக்கவும். பிறகு அதில் தக்காளி சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். அரைத்த இந்த சட்டினியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்டினியை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். சுமார் 2 நிமிடம் கொதிக்க வைத்து பிறகு இறக்கவும். அவ்வளவுதான் காரசாரமான சுவையில் பூண்டு கார சட்னி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!