Chettinad Style Chicken Rasam Recipe : இந்த கட்டுரையில் செட்டிநாடு கோழி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ரசம் இல்லாமல் மதிய உணவு முழுமை அடையாது. குறிப்பாக தென் மாவட்டங்களில். ரசத்தில் துளசி ரசம் மிளகு ரசம் தக்காளி ரசம் என பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கோழி ரசம். அதுவும் செட்டிநாடு ஸ்டைலில். இந்த ரெசிபி இதுவரை நீங்கள் உங்கள் வீட்டில் செய்யவில்லை என்றால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். இந்த கோழி ரசம் சாப்பிடுவதற்கு சற்று வித்தியாசமான சுவையிலும், செய்வதற்கும் மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது ஆரோக்கியமானது. குறிப்பாக பருவ மழை காலத்தில் சளி இருமல் உள்ளவர்களுக்கு இந்த ரசம் செஞ்சு கொடுங்க சீக்கிரம் குணமாவாங்க. மேலும் குழந்தைகளுக்கு மழை காலத்தில் சளி இருமல் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒரு முறை இந்த செட்டிநாடு கோழி ரசம் செய்து கொடுங்கள். சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் செட்டிநாடு கோழி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு.. ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க!
undefined
செட்டிநாடு கோழி ரசம் செய்ய தேவையான பொருட்கள் :
கோழி - 1/2 கிலோ
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
வெங்காய விழுது - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: சுவையான செட்டிநாடு வத்தல் குழம்பு... ரெசிபி இதோ!
செய்முறை :
செட்டிநாடு கோழி ரசம் செய்ய முதலில் எடுத்து வைத்த சிக்கனை நன்கு கழுவி நறுக்கி கொள்ளுங்கள். பிறகு புளியை சூடான நீரில் சுமார் 20 நிமிடம் ஊற வைத்து, அதில் இருந்து சாற்றை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கிறீய பச்சை மிளகாய், வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். இவற்றுடன் சிக்கனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வதக்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு புளி கரைசலை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து சிக்கனை அதிலிருந்து எடுக்கவும். பரிமாறும் சமயத்தில் சிக்கனை பொடியாக நறுக்கி ரசத்தில் போடவும். அவ்வளவு தான் ருசியான செட்டிநாடு கோழி ரசம் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D