Iyengar Milagu Kulambu Recipe : இந்த கட்டுரையில் ஐயங்கார் ஸ்டைலில் மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? மதியம் சாப்பாடுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் உங்களுக்கான பதிவுதான் இது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஐயர் வீட்டு ரெசிபிகள் பிடிக்கும் என்றால், ஐயங்கார் ஸ்டைலில் மிளகு குழம்பு செய்து கொடுங்கள். இந்த குழம்பு இந்தக் குழம்பு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. எந்த காய்கறி தேவையில்லை குறிப்பாக செலவு மிச்சம். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. சளி பிடித்திருக்கும் சமயத்தில் இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சளி உடனே முறிந்து விடும். இந்த மிளகு குழம்பு உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ஐயங்கார் ஸ்டைலில் மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: கேரளா ஸ்டைலில் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு.. ரெசிபி இதோ!
undefined
ஐயங்கார் ஸ்டைலில் மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 1
சீரகம் - 1/2 ஸ்பூன்
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூப்
வெல்லம் - சிறு துண்டு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு... இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க!
செய்முறை :
ஐயங்கார் ஸ்டைல் மெழுகு குழம்பு செய்ய முதலில் புளியை சூடான நீரில் சுமார் 10 நிமிடம் ஊற வைத்து அதில் இருந்து சாட்டை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடையை அடைப்பில் வைத்து அதில் இரண்டு துளி எண்ணெய் விட்டு பின் மிளகுத்தூள் உளுந்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் சீரகம் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பிறகு அது ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் புளி சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும் போது சிறுதுண்டு வெல்லம் சேர்க்கவும். பிறகு அரைத்து வைத்த மிளகு பேஸ்ட்டை சேர்த்து குழம்பு சிறிது கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். குழம்பில் என்னை பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கு இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D