Thakkali Pachadi Recipe : இந்த கட்டுரையில் திருநெல்வேலி ஸ்பெஷல் சுவையான தக்காளி பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் ஒன்று தக்காளி. தக்காளியை சட்னியாக மட்டுமின்றி பச்சடியாகவும் வைத்து சாப்பிடலாம் தெரியுமா? தக்காளி பச்சடி தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. அதுவும் குறிப்பாக திருநெல்வேலி கல்யாண வீடுகளில் இந்த பச்சடி கண்டிப்பாக இடம்பெறும். இந்த தக்காளி பச்சடி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட .தக்காளி பச்சடியை சூடான சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி இதை இட்லி, தோசை சப்பாத்தி, பழைய சோறு என அனைத்திற்கும் கூட வைத்து சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் திருநெல்வேலி ஸ்பெஷல் தக்காளி பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!
தக்காளி பச்சடி செய்ய தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி - 10 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 7 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 3/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு.. செம்மையா இருக்கும்! செஞ்சு பாருங்க..
செய்முறை :
தக்காளி பச்சடி செய்ய முதலில், அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழுவி வைத்த துவரம் பருப்புடன், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சாம்பார் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சுமார் மூன்று விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அவை நன்கு வெந்ததும் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உழுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்த இதனை அடுப்பில் இருக்கும் பச்சடியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவவும். அவ்வளவுதான் டேஸ்டான தக்காளி பச்சடி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D