திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு.. செம்மையா இருக்கும்! செஞ்சு பாருங்க..

திருநெல்வேலி ஸ்பெஷல், சொதி குழம்பை சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

tirunelveli sodhi kulambu recipe in tamil mks

திருநெல்வேலி என்றதும் நிறைய பேருக்கு முதலில் நினைவுக்கு வருவது  அல்வா தான். ஆனால், நீங்கள் சொதி குழம்பு பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா..? இதுவும் திருநெல்வேலி ஸ்பெஷலில் ஒன்று தான்!!

சொதி குழம்பு திருநெல்வேலி மிகவும் பிரபலமானது. இந்த சொதி குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் முக்கியமாக இந்த சொதி குழம்பு செய்வது ரொம்பவே ஈஸி. வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சொதி குழம்பை சூடான சாதம், ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த சொதி குழம்பை சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இரவு சப்பாத்திக்கு ஒன் டைம் கடாய் பன்னீர் கிரேவி செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க!!

சொதி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 100 கிராம்
பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்காய் - 1(நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1 கப்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப 
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  பலாக்கொட்டையில் இப்படி ஒருமுறை இப்படி வறுவல் செய்ங்க.. கறி சுவையை மிஞ்சும் அளவுக்கு டேஸ்ட் இருக்கும்!

செய்முறை: 
சொதி குழம்பு செய்ய முதலில், எடுத்து வைத்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு, தேங்காய்  பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு தடவை பால் எடுக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த பாசிப்பருப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன்  இரண்டாவதாக எடுத்து வைத்த தேங்காய் பாலை சேர்க்கவும். பிற்கு அதில் பொடியாக நறுக்கி வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளையும் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு வேக வையுங்கள்.

காய்கறிகள் நன்கு வந்ததும் இப்போது அதில் பாசிப்பருப்பை சேர்த்து கிளறி விடுங்கள். பின்னர், முதன் முதலில் எடுத்த தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து கொதிக்க விடுங்கள். குழம்பு நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் எடுத்து வைத்து எலுமிச்சை சாறு மற்றும் உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு முறை கலக்கவும்.

அதன் பிறகு பக்கத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி அது நன்கு உருகியதும், அதில் சீரகம், கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து 
தாளிக்கவும். இப்போது தாளித்ததை குழம்புடன் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான ருசியில் சொதி குழம்பு ரெடி!! 

நீங்களும் இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios