Manathakkali Keerai Kootu Recipe : பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள மணத்தக்காளி கீரையில் கூட்டு செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நம் அன்றாட உணவில் தினமும் கீரை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கண்டிப்பாக தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும். ஏனெனில் கீரைகள் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரையில் பல வகைகள் உள்ளது அவற்றில் ஒரு முக்கியமான கீரை தான் மணத்தக்காளி கீரை.
மணத்தக்காளி கீரையின் நன்மைகள் :
undefined
இப்படி பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள இந்த கீரையில் கூட்டு செய்வது எப்படி என்று இன்றைய கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கல்யாண வீட்டு ஸ்டைலில் உருளைக்கிழங்கு பால் கறி ஒரு முறை செய்து பாருங்க!
மணத்தக்காளி கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள் :
மணத்தக்காளி கீரை - 1 கட்டு
பாசி பருப்பு - 1/2 கப்
தேங்காய் - 1 மூடி
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: சிறுநீரக பிரச்சனையை ஒழிக்க உதவும் வாழைத்தண்டு வைத்து டேஸ்டான வாழைத்தண்டு மோர் கூட்டு செய்து சாப்பிடுங்க!.
செய்முறை :
மணத்தக்காளி கீரை கூட்டு செய்ய முதலில், மணத்தக்காளி கீரை மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி கொள்ளுங்கள். பிறகு எடுத்து வைத்த ஒரு முடி தேங்காய்விலிருந்து பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வையுங்கள். அவை நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி அவற்றில் எடுத்து வைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும் பிறகு அதை நன்கு கடையவும்.
இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பெருங்காயத்தூள், வர மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை கீரையுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான மணத்தக்காளி கீரை கூட்டு தயார். சூடான சாதத்தில் நெய் மற்றும் இந்த மணத்தக்காளி கீரை கூட்டு சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D