வீடே மணக்கும் ருசியான பாய் வீட்டு குஸ்கா.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Aug 20, 2024, 3:13 PM IST

Muslim Style Kuska Recipe : இந்த கட்டுரையில் பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தினமும் மதியம் சாம்பார், ரசம், சாதம் என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்கள் உங்களுக்கான பதிவிட இது. உங்கள் வீட்டில் பாஸ்மதி அரிசி இருந்தால் அதை வைத்து பாய் வீட்டு குஸ்காவை செய்து சாப்பிடுங்கள். இந்த குஸ்கா சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த குஸ்கா உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி.? வெறும் 5 நிமிடம் போதும் டக்குனு வேலை முடிஞ்சுடும்...

Tap to resize

Latest Videos

undefined

பாய் வீட்டு குஸ்கா செய்ய தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 5 கப்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
பெரிய வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது) 
தக்காளி - 2 (நீளமாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது) 
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
முந்திரி - 7
தயிர் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - 7 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!

செய்முறை :

பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரின் நன்கு கழுவி,  சுமார் 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் என்னை நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் முந்திரி மற்றும் தயிர் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது அதில் கரம் மசாலா மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கவும். விசில் போனதும் குக்கரை திறந்து மீண்டும் ஒருமுறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பாய் வீட்டு ஸ்டைலில் குஸ்கா ரெடி. இந்த குஸ்காவுடன் நீங்கள் சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி அல்லது வெறும் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் கூட சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!