Brinji Rice Recipe : கல்யாண வீட்டு ஸ்டைலில் வீட்டிலேயே பிரிஞ்சி ரைஸ் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே, அனைவருக்கும் வெரைட்டி ரைஸ் என்றாலே ரொம்பவே பிடிக்கும். அதிலும் குறிப்பாக, பிரிஞ்சி ரைஸ் என்றாலே சொல்லவே வேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் தட்டை காலி செய்து விடுவார்கள். அதுவும் குறிப்பாக கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி ரைஸ் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி ரைஸ் செய்ய விரும்புகிறீர்களா உங்களுக்கான பதிவு தான் இது. முக்கியமாக இந்த ரைஸ் செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். சரி வாங்க, இப்போது இந்த கட்டுரையில் கல்யாண வீட்டு ஸ்டைலில் வீட்டிலேயே பிரிஞ்சி ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேங்காய் பாலும், பட்டாணியும் வச்சு இப்படி ஒருமுறை பிரியாணி செஞ்சு பாருங்க... அடிக்கடி இதைத்தான் செய்வீங்க!
undefined
பிரிஞ்சி ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
பிரியாணி இலை - 4
அன்னாசி பூ - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
புதினா இலை - 1 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி இலை - 1 கப் (நறுக்கியது)
பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு - 1 கப்
தேங்காய் பால் - 500 மி.லி
முந்திரி - 4 (வறுத்தது)
பிரட் துண்டுகள் - தேவையான அளவு (வறுத்தது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
நெய் - 4 ஸ்பூன்
தண்ணீர் - 750 மி.லி
இதையும் படிங்க: காலையில குழந்தைக்கு மதியம் டிபனுக்கு இந்த வரைட்டி ரைஸ் செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
செய்முறை :
முதலில் எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு அதை சுமார் 15 நிமிடம் ஊற வையுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி பிரியாணி இலை, அன்னாசி பூ, சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சோம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புதினா இலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அரிசி உடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு முறை கிளறிவிடவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கிளறி விடுங்கள். பின் நெய் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள்.
சுமார் 15 நிமிடம் கழித்து முந்திரி பிரட் துண்டுகள், கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி விடுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதன் மேல் பிரிஞ்சி ரைஸ் வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து சுமார் 10 நிமிடம் சூடாக்க வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான கல்யாண ஸ்டைலில் பிரிட்ஜ் ரைஸ் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D