Mushroom Chukka Recipe ; கட்டுரைகளில் காளான் சுக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அசைவ சுவையில் ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காளான் பிடிக்குமா? அப்படி பிடித்தால் அவர்களுக்கு காளானில் சுக்கா செய்து கொடுங்கள் இந்த காளான் சாப்பிடுவதற்கு அசைவ சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கட்டுரைகளில் காளான் சுக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காளான் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
undefined
காளான் - 250 கிராம்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 1/2 ஸ்பூன்
பட்டை - 1
காய்ந்த மிளகாய் - 8
கடுகு - 1 ஸ்பூன்
பூண்டு - 1 1/2 ஸ்பூன் (இடித்தது)
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
புளி கரைசல் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காளான் சுக்கா செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சீரகம், வெந்தயம், மிளகு, தனியா, பட்டை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி, ஆற வைத்து பின் அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு காளானை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் இடித்த பூண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனை அடுத்து பின் அதில் காளானை சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
காளான் நன்கு வெந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு, கெட்டியாக கரைத்த புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின், ஐந்து நிமிடம் கழித்து தயாரித்து வைத்த பொடியை அதன் மேல் தூவி ஒருமுறை நான்கு கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான அசைவ சுவையில் டேஸ்டான காளான் சுக்கா ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.