குட்டீஸ்கள் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறார்களா? இப்படி சட்னி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

By Kalai Selvi  |  First Published Aug 17, 2024, 6:30 AM IST

Curry Leaves Chutney Recipe : கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாகவே பலரும் கருவேப்பிலையை விரும்பி சாப்பிடுவதில்லை. உணவில் இருந்தால் கூட அதை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு கறிவேப்பிலை பிடிக்கவே பிடிக்காது. ஆனால், கருவேப்பிலை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது தெரியுமா? கருவேப்பிலையில் இரும்புச்சத்து உட்பட்ட பிற சத்துக்கள் உள்ளது. எனவே, நீங்கள் கருவேப்பிலையை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிட்டு அதில் இருக்கும் ஆரோக்கியத்தை முழுமையாக பெறலாம். அந்த வகையில், இன்றைய கட்டுரையில் கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: உடல் எடை டக்குனு குறையணுமா? அப்ப உடனே இந்த சட்னி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்!

Tap to resize

Latest Videos

undefined

கருவேப்பிலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை - 1/2 கப்
தேங்காய் - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிதளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  வெறும் 10 நிமிடத்தில்.. இட்லி தோசைக்கு டேஸ்ட்டான உளுந்தம் பருப்பு சட்னி.. ரெசிபி இதோ!

செய்முறை:

கருவேப்பிலை சட்னி செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் புலியையும் சேர்த்து வதக்கவும். பிறகு அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் கருவேப்பிலை போட்டு மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும்.  பிறகு அதை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் வருத்த பருப்புகள் புளி கருவேப்பிலை பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

ஒரு கடையை அடுப்பில் வைத்து அது தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்த சட்டினியை சேர்த்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான கருவேப்பிலை சட்னி ரெடி. இந்த சட்டினியை நீங்கள் இட்லி தோசையுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இந்த சட்டினியை நீங்கள் தாளிக்காமல் துவையலாகவும் கூட சாப்பிடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!