Pudina Chutney Recipe : இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக புதினா சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? அதற்கு சைடிஸ் ஆக என்ன சட்னி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் புதினா இருந்தால் அதை வைத்து சூப்பரான சட்னி செய்து சாப்பிடுங்கள். அதுவும் வழக்கம் போல அல்லாமல் சற்று வித்தியாசமான ஸ்டைலில் செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் புதினா சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடத்தில்.. இட்லி தோசைக்கு டேஸ்ட்டான உளுந்தம் பருப்பு சட்னி.. ரெசிபி இதோ!
undefined
புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
புதினா - 2 கைபிடி
கடலைப்பருப்பு - 1 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
பூண்டு - 3
புளி - சிறிதளவு
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: குட்டீஸ்கள் கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறார்களா? இப்படி சட்னி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!
செய்முறை:
புதினா சட்னி செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து சுமார் ஒரு நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். இப்போது இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.
அவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். இதனுடன் துருவிய தேங்காய் சுவை கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது சட்டினியை ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு தாளித்த இதனை சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் டேஸ்டான புதினா சட்னி ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D