வாருங்கள்! டீ டைம் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்று ஞாயிற்று கிழமை என்பதால் குடும்பத்துடன் அனைவரும் இருப்பீர்கள். இபப்டி குடும்பத்துடன் அமர்ந்து டீ அல்லது காபி குடிக்கும் மாலை நேரத்தில் ஒரு ஸ்னாக்ஸ் அதுவும் சுட சுட செய்து கொடுத்தால் யார் தான் சாப்பிடாமல் இருப்பார்கள். வழக்கமாக ஒரு போண்டா ,வடை, கொழுக்கட்டை போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் அருமையான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் காண உள்ளோம்.
முட்டை போண்டா, முட்டை சாப்ஸ் போன்ற வரிசையில் இன்று நாம் முட்டையுடன் ஆனியன் சேர்த்து பஜ்ஜி ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை உங்க வீட்டு குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
வாருங்கள்! டீ டைம் ஸ்னாக்ஸிற்கு சூப்பரான முட்டை ஆனியன் பஜ்ஜி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
கடலைமாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 2
கேரட் - 1/2
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை-கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் தனி தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். கிழங்கினை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். முட்டை ஓட்டை எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும். முட்டையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், மல்லித்தழை,பச்சை மிளகாய் முதலியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பௌல் எடுத்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே பௌலில்மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையில் முட்டைகளை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் இந்த மாவினை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போண்டா போன்று எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொண்டால் அருமையான முட்டை ஆனியன் பஜ்ஜி ரெடி!
சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இவைகளை உங்க தட்டுக்குள் சேர்த்துக்கங்க!