ஒரு முறை இப்படி சிக்கனை சமைத்து பாருங்க! ஒரு பீஸ் கூட கிடைக்காது!

By Asianet Tamil  |  First Published Apr 23, 2023, 2:28 PM IST

வாருங்கள்! சுவையான சேலத்து சிக்கன் சுக்கா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலா


அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க. இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதனை மிகவும் லயித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் சமைப்பார்கள். உதாரணமாக செட்டிநாடு ஸ்டைல், மதுரை ஸ்டைல், நெல்லை ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சேலம் ஸ்டைலில் சிக்கன் சமைக்க உள்ளோம். சிக்கன் சுக்காவை சேலத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது என்பது தெரியாதா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

வாருங்கள்! சுவையான சேலத்து சிக்கன் சுக்கா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறித
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைக்க :

சின்ன வெங்காயம் - 5
மிளகு - 3 ஸ்பூன்
சீரகம்-1ம் ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
சிறிய தக்காளி - 1
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை அலசி விட்டு தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள் தூள் தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 1 மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, கிராம்பு, சீரகம் , மிளகு , பட்டை, சோம்பு, மல்லி மற்றும் தேங்காய் சேர்த்து சிரித்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் குடில் கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் உப்பு தூவி சிறிது தண்ணீர் விட்டு சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் வேகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து விட வேண்டும். சிக்கன் வெந்து தண்ணீர் வற்றிய பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழையை தூவி பரிமாறினால் அட்டகாசமான தாறுமாறான சிக்கன் சுக்கா ரெசிபி ரெடி!

தாம்பத்யத்தில் ஹார்ஸ் பவர் பெற இனி வயக்ரா எதுக்கு ? பனங்கிழங்க ட்ரை  பண்ணி பாருங்க! சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்
 

Latest Videos

click me!