ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி ஃபிஷ் – கிரிஸ்பியாக, சுவையாக!

சில்லி சிக்கன் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் சில்லி மீன் பொரியல் சாப்பிடிருக்கீங்களா? ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். அதற்கு பிறகு வீட்டில் அடிக்கடி செய்ய துவங்கி விடுவீர்கள். அதந்த அளவிற்கு ஹோட்டல் சுவையையே மிஞ்சும் அளவிற்கு சில்லி மீன் செய்து அசத்தலாம்.

chilli fish recipe

சில்லி ஃபிஷ் என்பது தமிழர்களால் மிகவும் விரும்பப்படும் சைடு டிஷ் ஆகும். இது ஒரு இந்திய-சீன உணவுப் கலவையாக இருந்து, சுவையான மசாலா மற்றும் விதவவிதமான மீன் கலவையால் தனித்துவம் பெற்ற ஒரு விருந்து உணவாக உள்ளது. வெறுமனே ரொட்டி, பரோட்டா, ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றுடன் சேர்த்தோ, ஸ்நாக்ஸாகவே சாப்பிட்டால் இந்த ரெசிபி மிகச் சிறந்த தேர்வாகும்.

சில்லி ஃபிஷ் தனித்துவம் :

Latest Videos

- கிரிஸ்பியான வெளிப்புறம்  சப்பாத்தா, பரோட்டாவுக்கு ஏற்ற துணை உணவு
- உள்ளே மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
- பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சோயா சாஸுடன் கம்பீரமான சுவை!
- காரத்தை விருப்பப்படி குறைக்கலாம் அல்லது அதிகப்படுத்தலாம்!

தேவையான பொருட்கள் :

மீன் (பானாஸி, சீலா அல்லது வஞ்சரம்)     - 250 கிராம்
கார்ன் ஃப்ளோர் - 2 டீஸ்பூன்
மைதா மாவு -  2 டீஸ்பூன்
முட்டை -  1
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் -  1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் -  1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் -  1 டீஸ்பூன்
சில்லி சாஸ் -  1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -     3 (நறுக்கியது)
வெங்காயம் -  1 (கூம்பாக நறுக்கியது)
குடைமிளகாய் -  1/2 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (வறுக்க)

மேலும் படிக்க: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த 5 தவறுகளை மட்டும் செய்துடாதீங்க

சில்லி ஃபிஷ் செய்வது எப்படி? 

- மீனை மசாலாவுடன் ஊற வைக்க மீனை சுத்தமாக கழுவி, உப்பு, மிளகு தூள், சோயா சாஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- அதன்பிறகு, கார்ன் ஃப்ளோர், மைதா மாவு, முட்டை சேர்த்து மீனை சீராக பிசைந்து கொள்ளவும்.
- மீனை பொரிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து, மிருதுவாக மாவுடன் கோட்டிங் செய்யப்பட்ட மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
- தங்க நிறமாக மற்றும் கிரிஸ்பியாக மொறுமொறுவென்று வரும் வரை பொரிக்கவும்.
- நன்கு க்ரிஸ்பியானதும் தனியாக எடுத்து வைக்கவும்.
- சில்லி ஃபிஷ் மசாலா தயாரிக்க ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
- பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து கொஞ்சம் பொன்னிறமாக வர வதக்கவும்.
- அதன்பின் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வெந்து வரும் வரை கிளறவும்.
- இதனுடன் பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து மசாலா அனைத்தையும் உறிஞ்சும் வரை கிளறவும்.

சில்லி ஃபிஷ் பரிமாறும் முறைகள் :

- ஸ்டார்டர் ஆக தனியாக சுவைத்து கொள்ளலாம்.
- சைடு டிஷ் ஆக ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பரோட்டாவுடன் பரிமாறலாம்.
- சூடாக இருக்கும் போதே சாப்பிடவும் . இதன் கிரிஸ்பியான தன்மை நீண்ட நேரம் இருக்காது.

சுவை கூட்ட டிப்ஸ் :

- மேலும் கிரிஸ்பியாக்க மீனை இரண்டு முறை பொரிக்கலாம்.
- ஸ்பைசி விரும்பினால்  அதிக மிளகு தூள், சிவப்பு மிளகாய் சேர்க்கலாம்.
- சீன உணவு சுவைக்காக சிறிது வினிகர் (vinegar) சேர்க்கலாம்.

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் ஃபுரூட் ஜூஸ் குடிக்க கூடாது...ஏன்னு காரணம் தெரியுமா?

சில்லி ஃபிஷ் – ஆரோக்கிய நன்மைகள் :

- ப்ரோட்டீன் நிறைந்த உணவு . உடல் வளர்ச்சிக்கு உதவும்.
- ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,  இதயம் மற்றும் மூளைக்கு நல்லது.
-  குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த விருப்பம்.
- சைடு டிஷ் மற்றும் ஸ்னாக் இரண்டாகவும் எளிதில் உணவாகலாம்.

சில்லி ஃபிஷ் என்பது மொறு மொறுப்பாகவும், நன்றாக உறிஞ்சிய சுவையுடன் இருக்கும் ஒரு அற்புதமான உணவு. வீட்டிலேயே மிக எளிய முறையில் செய்து பார்த்து மகிழுங்கள். பிறகு, உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்

vuukle one pixel image
click me!