சிக்கன் சுக்கா அசைவ பிரிர்களின் மிகவும் விருப்பமான உணவு ஆகும். ரெஸ்டாரண்ட்களில் கிடைப்பது போலவே அதே காரசாரமான சுவையில் இதை செய்து சுவைக்கலாம். வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன் சுக்கா (Chicken Chukka) என்பது தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு கிராமத்து சுவை உணவு. இது கிரிஸ்பியான, மசாலா ஊறிய, சுவையை கொடுக்கும் ஒரு காரசாரமான சிக்கன் அசைவ உணவாகும். ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் இந்த உணவுகளை இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம். மசாலா தூக்கலாக இருக்கும் இந்த டிரை சிக்கன் சுக்கா அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக இருக்கும்.
தேவையான பொருட்கள் (4 பேர்) :
நாட்டு கோழி – 500 கிராம் (மெல்லிய துண்டுகளாக வெட்டியது)
பூண்டு – 6 பல் (நறுக்கியது)
வெங்காயம் – 2 (பெரியது, நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக வெட்டியது)
தக்காளி – 2 (நன்கு நசுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்
நெய் / நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)
மசாலா தூள்:
மிளகாய்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கிராமத்து கோழி மசாலா – 1 டீஸ்பூன் (இது சுவையை சூப்பராக மாற்றும்)
மேலும் படிக்க: 10 அருமையான பரோட்டா வகைகள்...இவற்றையும் செய்து பாருங்க
செய்முறை:
- ஒரு பெரிய பாத்திரத்தில் கோழி துண்டுகளை வைத்து, அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், சீரக தூள், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- குறைந்தபட்சம் 30 நிமிடம் வரை ஊற விட வேண்டும்.
- ஒரு பிரஷர் குக்கரில் கோழி துண்டுகள், சிறிதளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து ஒரு விசில் வரை வேகவைக்க வேண்டும்.
- இது கோழியை மென்மையாகவும், சுக்காவுக்கு நேர்த்தியாகவும் செய்யும்.
- ஒரு பெரிய கடாயில் நல்லெண்ணெய் / நெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
- தக்காளி சேர்த்து, நன்கு மசிந்து எண்ணெய் வெளியேறும் வரை வதக்க வேண்டும்.
- வேகவைத்த கோழியை மசாலா கலவையில் சேர்த்து, மிதமான தீயில் வறுக்க ஆரம்பிக்கவும்.
- இதை 10-15 நிமிடங்கள் நன்கு கிளறிக் கிளறி வறுக்க வேண்டும்.
- கடைசியாக மிளகு தூள், கிராமத்து கோழி மசாலா, சிறிதளவு நெய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
- கொத்தமல்லி தூவி, லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.
சிக்கன் சுக்காவிற்கு ஏற்ற காம்போ உணவுகள் :
- சாதம் மற்றும் கருவாட்டு குழம்பு சாதம், சாம்பார் சாதம், சாதாரண வெந்தயக் குழம்பு
- பரோட்டா மற்றும் ஹோட்டல் ஸ்டைல் முட்டை பரோட்டா
- சுடச்சுட தோசை மற்றும் கோழி சுக்கா
- நெய் சாதம் மற்றும் சீரக சாதத்துடன் செம காம்போ
மேலும் படிக்க: காய்கறியே தேவையில்லை...செம சூப்பரான அப்பளம் குழம்பு ரெசிபி
சுக்கா செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
- கோழியை மசாலாவில் அதிக நேரம் ஊற விடவும். இதனால் சுவை முழுமையாக ஊறும்.
- மிதமான தீயில் மட்டுமே வறுக்கவும்.இது நல்ல crispy effect தரும்.
- மஞ்சள் தூள் தவறாமல் சேர்க்க வேண்டும். இது கோழியின் மணத்தை சமன் செய்யும்.
- கடைசி 5 நிமிடங்களில் கொஞ்சம் கூட எண்ணெய் சேர்க்க வேண்டாம் . இல்லையெனில் சுக்கா பொருட்கள் தனியாக பிரிந்து விடும்.
சிக்கன் சுக்கா என்பது ஒரு செம்ம கிரிஸ்பி, காரசாரமான உணவு, அதை வீட்டிலேயே 100% உணவகத்துக்கு சமமாக தயாரிக்கலாம்.