நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவு காமினேஷன்.. இந்த உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீங்க....

By Ramya s  |  First Published Oct 25, 2023, 7:53 AM IST

நீங்கள் தவிர்க்க வேண்டிய வேறு சில உணவு சேர்க்கைகள் உள்ளன. அத்தகைய உணவு சேர்க்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


உணவுகளை சேர்த்து சாப்பிடுவது என்பது ஒரு ஆரோக்கியமான விருப்பமாக இருக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், அது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.. உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்களைச் சேர்ப்பது ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தடுக்க உதவும். அதே சமயம், சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, பாலுடன் தயிர் சாப்பிடக் கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இதேபோல், நீங்கள் தவிர்க்க வேண்டிய வேறு சில உணவு சேர்க்கைகள் உள்ளன. அத்தகைய உணவு சேர்க்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எந்த வகையான உணவு சேர்க்கைகளை தவிர்க்க வேண்டும்?

Latest Videos

undefined

உணவுடன் பழங்கள்

நம் உணவில் இனிப்புச் சுவையை சேர்க்க பழங்களை அடிக்கடி சாப்பிடுகிறோம். அதேசமயம் பழங்களை உணவுடன் உட்கொள்ளக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். காலை உணவாக பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். இது தவிர, உணவுக்கும் பழங்களுக்கும் இடையே போதுமான நேர இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கொழுப்பு இறைச்சி மற்றும் சீஸ்

கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் மற்றும் நிறைவுற்ற இறைச்சிகளுடன் சீஸ் உட்கொள்வது, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அளவை கணிசமாக அதிகரிக்கும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உங்கள் உணவை சமநிலைப்படுத்த, கொழுப்புகள் குறைவாக உள்ள இறைச்சியைத் தேர்ந்தெடுத்து, குறைந்த கொழுப்புள்ள சீஸ் சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால்

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் அமிலம் உள்ளது. இந்த பழங்கள் சாப்பிடும் போது பால் சாப்பிட்டால், பாலை தயிர் ஆக்கி, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, அவற்றை ஒன்றாக உட்கொள்வதைத் தவிர்த்து, அவற்றுக்கிடையே போதுமான நேர இடைவெளியை வைத்திருங்கள்.

ஆட்டிறைச்சி vs கோழி: உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

இரும்பு மற்றும் கால்சியம்

இரும்பு மற்றும் கால்சியம் மனித உடலுக்கு இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள். ஆனால் அவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது, உடலால் இரண்டு சத்துக்களையும் ஒரே நேரத்தில் உறிஞ்ச முடியாது. இரண்டையும் சிறப்பாக உறிஞ்சுவதற்கு, வைட்டமின் சி உடன் இரும்பு மற்றும் வைட்டமின் D உடன் கால்சியம் ஆகியவை நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்..

மீன் மற்றும் பால்

எந்த இறைச்சியுடன் எந்த வகையான பால் பொருட்களையும் கலப்பது தவறான தேர்வாக இருக்கும். பாலுடன் இறைச்சியை கலந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று பல நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

click me!