ஆப்பிள் நீரேற்றம் உள்ள கனி. கோடைகாலத்தில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை உயரும்போது அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். அப்போது தான் நீரேற்றத்துடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ஆப்பிள் பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஆப்பிள் பழம், உடலை நீரேற்றம் செய்வதில் தலைசிறந்த பழமாக விளங்குகிறது. கோடைகால வெப்பம் மனித ஆரோக்கியத்தை பல்வேறு விதங்களில் பாதிக்கலாம். இப்படியான உஷ்ணமான காலநிலையில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஒருவர் போதுமான அளவு நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்.
மருத்துவ நிபுணர்கள் கோடையில் தண்ணீர் குடிப்பதை போலவே பழங்களையும் குறிப்பாக, ஆப்பிள்கள் சாப்பிடுவதை கடைபிடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். 1 நாளைக்கு ஒரு ஆப்பிள் உண்பதால் உடலில் நோய்கள் விலகி ஓடுகிறது. ஆப்பிள் பழங்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள், நார்ச்சத்து, பல அத்தியாவசிய தாதுக்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
undefined
கோடையில் ஏற்படும் கடுமையான வெப்பம் வயதானவர்கள், குழந்தைகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களை மிகவும் பாதிக்கிறது. ஆப்பிளின் ஊட்டச்சத்துக்கள் இத்தகைய நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.
ஆப்பிள் பழத்தை தொடர்ந்து எடுத்து கொள்வதால் வெப்ப பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் ஆகிய பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதாவது இதில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கிறது. இதனால் செரிமானம் மேம்படுகிறது.
இதையும் படிங்க: சுக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! இஞ்சியை விடவும் இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
கோடையில் ஆப்பிள்கள்!
ஆப்பிள்கள் 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. வைட்டமின் மட்டுமின்றி நார்ச்சத்துக்களையும் ஆக்ஸிஜனேற்றங்களையும் கொண்டுள்ளது. அதிகமான வெப்பம் உண்டாகும்போது அஜீரணம் ஏற்படு வாய்ப்புள்ளது. இந்த தட்பவெப்ப மாற்றத்தில் ஆப்பிள் உங்களுக்கு உதவும். ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு உதவுகிறது. கோடையில் ஆப்பிள் தவறாமல் உண்ணுங்கள்.
இதையும் படிங்க: கோடையில் நீர்ச்சத்து குறைபாடு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சிறுநீரக கற்கள் முதல் பெரிய லிஸ்ட்!!