ஆரோக்கியமாக வாழ சூரிய நமஸ்காரம் கட்டாயம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
சூரியனை பணிவது அல்லது வணங்குவதை சூரிய நமஸ்காரம் என்கிறார்கள். இந்த யோகாவை செய்வதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை விரட்ட முடியும். சரியான முறையில் சூரிய நமஸ்காரம் செய்து ஒரு நாளைத் தொடங்கினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் 5 முதல்10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நீங்கள் வேறு எந்த ஆசனமும் செய்ய வேண்டியதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
undefined
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சருமம் பொலிவாக இருக்கும். வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க சூரிய நமஸ்காரம் உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
செரிமான அமைப்பு:
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. செரிமான அமைப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது குடல்களின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. முன்னோக்கி வளைவதன் மூலம் வயிற்றை ஆரோக்கியமாக வைக்க முடியும். உங்களுக்கு வாயு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இந்த யோகாவை தவறாமல் செய்யுங்கள்.
மன நலம்:
உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்யுங்கள். உங்கள் உடல் நல்ல வடிவாக வைத்திருப்பதோடு மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கவலையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
நினைவாற்றலை மேம்படுத்தும்:
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்த இது உதவியாக இருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதால் இந்த ஆசனம் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை இயல்பாக்குகிறது.
மாதவிடாய் பிரச்சனைகள்:
சூரிய நமஸ்காரம் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. வயிற்று தசைகளை பலப்படுத்துகிறது. குறிப்பாக மாதவிடாய் வலியையும் குறைக்கிறது.
நீங்கள் தினமும் அதிகாலையில் சிறிது சீக்கிரம் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். இது உடல், மன வலிக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
இதையும் படிங்க: ஒரு ஸ்பூன் நெய்!! தினமும் உள்ளங்காலில் மசாஜ் செய்தால் கிடைக்கும் நன்மைகள்!!