Fitness
யோகாசனங்கள் உடலை மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவை.
பெண்கள் தினம்தோறும் சில யோகாசனங்களை செய்வதால் அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
பெண்கள் அதோமுக சவனாசனம் என்ற யோகாவை செய்தால் இரத்த ஓட்டம் தூண்டப்படும். முதுகு வலி, தொப்பை குறையும். தசைகள் இறுகும்.
பெண்கள் சிசுவாசனம் செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் முற்றிலும் நீங்கி உடலும் ஆரோக்கியம் ஆகும். சோர்வு இருக்காது.
மலாசனம் செய்வதால் மலச்சிக்கல் விரைவில் சரியாகும். தொடை, கழுத்து இடுப்பு எலும்புகள் வலுவாகும். மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
விருட்சாசனம் செய்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும். கால் தசைகளை, இடுப்பை வலுவாக்கும்.
கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்தால் முதுகு வலி பறந்து போகும். இடுப்பு வலி இருப்பவர்கள் செய்தால் நிவாரணம் பெறுவார்கள்.
நவாசனம் செய்யும் பெண்களுக்கு தைராய்டு, குடல்கள், சிறுநீரகம் தூண்டப்படும். தொடை, முழங்கால் வலி நீங்கும். மன அழுத்தம், பதற்றம் நீங்கும்.
பெண்கள் இந்த ஆசனம் செய்வதால் அவர்களின் பிட்டத்திற்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்று உறுப்புகள் நன்றாக இயங்கும். மனத்தளர்ச்சி சரியாகும்.
பெண்கள் ஹலாசனா செய்வது மூலம் அவர்களுடைய ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அவர்களுடைய சருமமும் பொலிவு பெறும்.