வெறும் வயிற்றில் பெருங்காய தண்ணீர்.. கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே கட்டுப்படுத்த 1 எளிய வழி.. ட்ரை பண்ணுங்க!

By Ma Riya  |  First Published Mar 15, 2023, 7:45 AM IST

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளைப் பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஒரு மசாலாவை ஒரு ஸ்பூன் வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் தலைவலி முதல் சளி இருமல் வரை பறந்து போகும். அப்படி என்ன மசாலா அது? அதை எப்படி உபயோகம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..

வீட்டு சமையலறையில் வைத்திருக்கும் பெருங்காயம், உணவை ருசிக்க வைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடல் பருமனை மட்டுமில்லாமல்.. வயிற்றுப் பொருமல், ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனைகளையும் பெருங்காயம் காணாமல் போக செய்யும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்தால் வியந்து போவீர்கள். எளிமையான செய்முறை தான்..

Tap to resize

Latest Videos

undefined

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவிடுங்கள். உடல் எடையை கணிசமாக குறைக்க இந்த அற்புத பானம் உங்களுக்கு உதவும். அதுமட்டுமில்லாமல் சருமம் கூட பொலிவு பெறும். வேறு என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? 

பெருங்காய தண்ணீர் நன்மைகள்..!

  • ஒற்றை தலைவலியை நீக்க பெருங்காய தண்ணீர் பருகலாம். இந்த பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிகுதியாக உள்ளன. 
  • மாதவிடாய் வலியை நீக்கி நிவாரணம் அளிக்கும். மாதவிடாய் காலத்தில் வலியால் துடிக்கும் பெண்களுக்கு பெருங்காய தண்ணீரை அற்புத பானம். 
  • சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டால் வெந்நீருடன் பெருங்காயம் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் சுவாச பிரச்சனைகளை கொஞ்சம் சமாளிக்கலாம்.  

இதையும் படிங்க: மோர் உடல் சூட்டை தான் தணிக்கும்னு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 டம்ளர் மோர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் இருக்கு!

  • நீங்கள் செரிமானம் போன்ற வயிறு பிரச்சனைகளை சந்தித்தால், பெருங்காயத்தை கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை, செரிமான பிரச்சனைக்கு, பெருங்காயத்தை மையாக அரைத்து அந்த பேஸ்ட்டை தொப்புளை சுற்றி தேய்க்கலாம்.   
  • இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொழுப்பை சுத்தமாகக் குறைக்கும். எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் பெருங்காயம் தண்ணீர் குடிக்கலாம். பெருங்காயத்தை உணவில் தொடர்ந்து பயன்படுத்தினால் இதய நோய் அபாயம் குறையும். 

இதையும் படிங்க: சமைக்காமல் இதை அப்படியே சாப்பிட்டால் போதும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்..!

click me!