Excercise: உடற்பயிற்சிக்குப் பிறகு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?

By Dinesh TGFirst Published Jan 10, 2023, 11:11 AM IST
Highlights

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி செய்வதனால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜன் மிக எளிதாக கிடைக்கிறது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு இரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து விடும். அதோடு, மேலும் இரத்தம் வெளியேற விடாமல் தடுக்கப்படுகிறது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

உடற்தகுதியின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உடற்பயிற்சி இருந்தாலும், ஒரு தீவிரமான உடற்பயிற்சியை முடித்த பின்னர், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதும் மிக முக்கியமாகும். அவ்வகையில், உடற்பயிற்சி செய்த பிறகு, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட வேண்டியவை

மீன் மற்றும் கோழி போன்ற இறைச்சிகளில் புரதம், நியாசின், துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் மெலிந்த தசைகளை சரிசெய்ய உதவி புரிவதோடு, அவை உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. 

காய்கறிகள்

இலை காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்து, பொட்டாசியம்,இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வலிமை மற்றும் சுறுசுறுப்பை அதிகப்படுத்த உதவி புரிகிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை இருப்பதனால், இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Stomach Pain: அடிக்கடி வயிற்று வலியா உடனடி நிவாரணம் பெற இதைச் செய்யுங்கள்!

அவகேடோ

அவகேடாவில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய எலக்ட்ரோலைட்டுகளுடன், ஆரோக்கியமான கொழுப்புகளின் உயர் மட்டமும் இருக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு, தசைப்பிடிப்பை குறைக்கவும், தசைச் சுருக்கத்தை மேம்படுத்த இது உதவுகிறது.

நட்ஸ்

புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்றவை நட்ஸ்களின் விதைகளில் காணப்படுகிறது. இவை உங்களின் உடல் எடையை குறைப்பதில் சிறந்தவையாக உள்ளது. மேலும் புரதம் நிறைந்த உணவாகவும் உள்ளது. இவை எலும்புகள், தசைகள் மற்றும் தோலை உருவாக்க உதவுகிறது

click me!