ஜிம்களில் உடற்பயிற்சி செய்யும் போது சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவது அச்சத்தை தருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு மாரடைப்பு ஏன் வருகிறது? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், இந்தி சீரியல் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி மற்றும் இந்தி பிக்பாஸ் வெற்றியாளர் சித்தார்த் சுக்தா உள்ளிட்டோர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தது நாம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனைவரின் மரணத்திற்கும் மாரடைப்பு தான் காரணம் என்பது பரிசோதனை அறிக்கைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. மாரடைப்புக்கும் உடற்பயிற்சிக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. பிரபலங்கள் பலருக்கும் நேர்ந்து வரும் இதுபோன்ற பிரச்னைகளால், மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் உடற்பயிற்சிகளை அதிகமாக செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அதன்படி உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய முடியுமோ அதை மட்டும் செய்தால் போதும் என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது உடற்பயிற்சி செய்யவே கூடாது. அப்படிப்பட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது தான், ஆனால்...
undefined
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோயெதிப்பு மண்டலம் பலப்படுகிறது. எடை கட்டுக்குள் இருக்கிறது. தசை ஆரோக்கியம் பெறுகிறது. இருதயம் நன்றாக செயல்படுகிறது என பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் அது அளவுக்கு மீறிச் செல்லும் போது உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யவேக் கூடாது என்பது நிபுணர்கள் கூறும் அறிவுரை. காய்ச்சல் வந்தாலும் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து விரைவில் குறையும். இந்த பாதிப்பால் காய்ச்சல் அதிகரிக்கும்.
இருமல் இருக்கும்போது உடற்பயிற்சி கூடாது
இருமலை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் பலர் இருமல் வந்தாலும் கடுமையான உடற்பயிற்சி செய்கிறார்கள். உண்மையில், இருமல் இருக்கும் போது உடற்பயிற்சி செய்தால், அது உங்கள் உடலை பலவீனப்படுத்தும். மேலும், உடலை அது மந்தமாக்கிவிடும். இதனால் கடைசியில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை கையமீறிச் சென்றுவிடும். அதனால் இருமல் இருக்கும்போது தயவுசெய்து உடல்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்.
அழற்சி, ஆஸ்துமா பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் வெள்ளைப் பூசனிக்காய்..!!
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்
வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் அனைத்தும் வயிற்றுடன் தொடர்புடையது. ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும்போது உடற்பயிற்சிகள் செய்வது முறையல்ல. இதனால் உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது. இது உங்களை மேலும் மனச்சோர்வடையச் செய்துவிடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எனவே காய்ச்சல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யாதீர்கள். உடம்பு சரியில்லாத நேரத்தில் ஓய்வு எடுப்பது தான் முக்கியம். உங்களுக்கு காய்ச்சல் இருக்கும்போது எடையை தூக்குவதையும், டிரெட்மில்லில் ஓடுவதையும் தவிர்க்கவும். இதனால் உங்களுக்கு பல்வேறு புதிய பிரச்னைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக உங்கள் உடல் மன அழுத்தத்தைச் சந்திக்கிறது. குறிப்பாக காய்ச்சல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உங்கள் இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இறுதியாக மாரடைப்புக் கூட நிகழலாம் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.