ஒரே மாதத்தில் 6 கிலோ எடையை சர்னு குறைக்கலாம்... இந்த டயட் போதும்!

By Ma riya  |  First Published May 5, 2023, 6:15 PM IST

ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க தேவையான உணவு திட்டம் இங்கு விளக்கப்பட்டுள்ளது. 


உடல் எடையை குறைப்பது மக்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம், நல்ல தூக்கம் போன்றவை உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். ஆனால் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மக்கள் தீவிரமான உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சிகளை கடைபிடிக்கிறார்கள். சிலர் சந்தையில் கிடைக்கும் சப்ளிமெண்ட்ஸ் சில மருந்துகளை வாங்கி உண்ணுகிறார்கள். ஆனால் ஆரோக்கியமான முறையில் ஒரே மாதத்தில் 5 முதல் 6 கிலோ வரை குறைக்கக்கூடிய உணவு திட்டத்தை குறித்து மக்கள் அக்கறை காட்டுவதில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராமில் உளவியல் நிபுணர் ராதிகா கோயில் பகிர்ந்துள்ளார். எடை குறைப்பு எளிதானது அல்ல. ஆனால் ஆரோக்கியமான உணவு மூலம் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். 

காலை 8 மணி

Tap to resize

Latest Videos

undefined

சியா விதைகளை தண்ணீருடன் சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும். காலையில் எழுந்தவுடன் 1 டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஊறவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து அதை பருகுங்கள். இந்த விதைகளில் ஒமேகா 3, கால்சியம், நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவை உள்ளன. சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால், உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். செரிமானம் மேம்படும். 

உலர் பழங்கள் (காலை 8:15 மணி)

நீங்கள் சியா விதைகள் தண்ணீர் குடித்த ​​15 நிமிடங்களுக்கு பிறகு ஊற வைத்த பாதாம் (5), 2 அக்ரூட் பருப்புகள் உண்ணுங்கள். கொஞ்சம் தண்ணீரில் இரவு முழுவதும் இதை ஊற வைப்பது நல்லது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். 

காலை உணவு (9 மணி)

காலை உணவாக 1 முளைகட்டிய தானியங்கள், சாண்ட்விட்ச் சாப்பிடுங்கள். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி தவிர பல வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. 

மதியம் (12 மணி)

காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியிருந்தாலும், இதற்கிடையில் பசித்தால் பப்பாளி, மாதுளை ஆகிய பழங்களையும், ஆளிவிதை, பூசணிக்காய் போன்ற விதைகளையும் கலந்து சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி எடை குறைய உதவும். 

 

மதிய உணவு (2 மணி)

மதிய உணவிற்கு 2 சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு வகைகள், தயிர், சாலட் எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் நிறைய சாப்பிட வேண்டும், ஏனெனில் இந்த டயட் திட்டத்தில், இரவில் லேசான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். 

தேநீர் நேரம் (4 மணி)

உணவு உண்ட 2 மணி நேரம் கழித்து தண்ணீர்விட்டான் கிழங்கு டீயை அருந்துங்கள். இது உடல் எடையை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இது தவிர, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும். சர்க்கரை சேர்த்த வழக்கமான டீக்கு பதிலாக மூலிகை டீயை அருந்தலாம். 

மாலை சிற்றுண்டி (6 மணி)

மாலையில் வரும் சின்ன பசிக்கு கொண்டைக்கடலை, பாசி பயறு மாதிரியான பயிறு வகைகளை சிற்றுண்டியாக சாப்பிடலாம். இவற்றில் வைட்டமின்களும், கனிம தாதுக்களும் உள்ளன. கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச் சத்து ரத்தசோகையை நீங்குவதுடன், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் அருமருந்தாக இருக்கும். கடலையில் புரதம் அதிகம் இருப்பதால், உடலில் ஆற்றல் அளவும் சீராக இருக்கும். 

இரவு உணவு (8 மணி) 

உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் இரவு 8 மணிக்குள் இரவு உணவு சாப்பிட வேண்டும். நான் இரவில் ஆக்டிவாக இருக்கமாட்டோம். நம் உடலும் ஓய்வெடுக்கும் என்பதால், இரவில் உண்ணும் உணவு இலகுவாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

எடை குறைக்க டிப்ஸ் 

  • கார்போஹைட்ரேட்டுகளை விட புரதம் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் புரத உணவை சாப்பிட்டால் விரைவில் பசி ஏற்படாது.
  • மேலே குறிப்பிட்டுள்ள டயட்டுடன் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 
  • சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய தவற வேண்டாம். 
  • இரவில் குறைந்தது 7 மணிநேரம் தூங்குங்கள். 
  • வறுத்த பொரித்த உணவுகளை தவிருங்கள். 
  • வெள்ளைச் சர்க்கரையை அதிகம் எடுத்து கொள்ள வேண்டாம். 

இதையும் படிங்க: வெயிலில் சுற்றி சருமம் கருத்து போனால் அரிசி மாவு 1 போதும்! 10 நிமிடத்தில் முகம் பளிச் என்று மாற பேஸ் பேக் ரெடி

click me!