தண்ணீரில் இந்த 1 பொருள் போட்டு ஆவி பிடிப்பதால் முகத்தில் இத்தனை ஜொலிப்பு கிடைக்குமா? அறிவியல் உண்மை தெரியுமா?

By Ma riyaFirst Published Jun 11, 2023, 1:54 PM IST
Highlights

நீராவியால் முகப்பொலிவு கிடைக்கும் என்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் தெரியுமா? எந்தெந்த பொருள்களை போட்டு ஆவி பிடிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

முகம் பொலிவாக இருக்க மக்கள் பல முயற்சிகள் செய்கின்றனர். அழகாக தோற்றமளிக்க ரோஸ்வாட்டர், ஆரஞ்சு தோல் பொடி, வைட்டமின் ஈ கேப்சூல், கற்றாழை போன்ற பல பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். சிலர் பார்லரில் அல்லது வீட்டில் தலையில் துண்டு வைத்து சுடுநீரை ஆவி பிடிப்பார்கள். இது தலைவலிக்கு நல்ல தீர்வாக அமையும். ஆவி பிடிக்கும்போது சிலர் வெந்நீரில் வேப்பம்பூ, உப்பு, எலுமிச்சை ஆகியவற்றை சேர்க்கிறார்கள். இதன் பின்னணியில் சருமம் தொடர்பான சில அற்புத ரகசியங்கள் உள்ளது. இப்படி ஆவி பிடிப்பதால் முகம் எப்படி பொலிவு பெறுகிறது என்பதை இங்கு காணலாம். 

வழக்கமான ஆவி பிடிக்கும்போது சருமத்துளைகள் திறந்திருப்பதால், அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும். குறிப்பாக கரும்புள்ளிகள், கருவளையம், வெண்புள்ளிகள் பிரச்சினை உள்ளவர்கள், ஆவி பிடித்தல், முகத்தை சுத்தம் செய்வது போன்றது. 

இரத்த ஓட்டம்: 

உங்கள் சருமத்தை எவ்வளவு கவனித்துக் கொண்டாலும், சில சமயங்களில் அது மந்தமானதாகவும், நீரிழப்புடனும் காணப்படும். இந்த சூழலில், ஆவி பிடிக்கலாம். இது சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படிங்க: வெயிலில் சுற்றி சருமம் கருத்து போனால் அரிசி மாவு 1 போதும்! 10 நிமிடத்தில் முகம் பளிச் என்று மாற பேஸ் பேக் ரெடி

தோல் நீரேற்றம்: 

சில சமயங்களில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் நமது முகத்தில் உள்ள தோல் வறட்சியடையும். சருமத்தின் அழகை மெருகூட்ட, முகத்தின் நீர்ச்சத்து சீராக இருக்க, அவ்வப்போது ஆவி பிடிக்க வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக மாறும்.

தோல் இளமையாக மாறும்: 

ஆவி பிடிப்பதால் முகத்தில் கொலாஜன், எலாஸ்டின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் காரணமாக நமது முகம் இளமையாகவும், பளபளப்பாகவும் தெரிகிறது. வழக்கமாக, தோல் பராமரிப்பு நிபுணர்கள் வாரத்திற்கு 3 முறை ஆவி பிடிக்க பரிந்துரைக்கின்றனர். 

இதையும் படிங்க: முகம் பொலிவு பெற காலையில் இதை செய்யுங்க!

click me!