Beauty

பேரழகு பெற

காலையில் சருமத்தை கொஞ்சம் பராமரித்தால் கூட போதும். டல்லடிக்கும் முகம் கூட பொலிவாக மாறும். 

 

எலுமிச்சை

எலுமிச்சை சாறும், கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும். 

தக்காளி ஸ்க்ரப்

தக்காளி சாறை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்தால் சருமம் பிரகாசமாக மாறும். வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும். 

பால்

காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த பால் வைத்து கழுவினால் சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் மாறும். கரும்புள்ளிகள் மறையும். 

தேன்

முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நீக்க தேனை பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் தேன் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் பொலிவாகும். 

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கண்களை சுற்றி இருக்கும் சுருக்கங்களை சரி செய்யும். கருவளையம் நீங்கும். 

முகம் கழுவுதல்

தினமும் காலையில் முகத்தை தூய்மையான நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு தான் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 

ஒவ்வாமை

சிலருக்கு தக்காளி, தேன், எலுமிச்சை, பால் போன்றவை முகத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் சருமத்தில் பரிசோதித்த பின்னர் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.