தினமும் முகத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லதா? என்னன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..!!

By Kalai SelviFirst Published May 25, 2023, 12:53 PM IST
Highlights

நீங்கள் உங்கள் முகத்தை அழகாக ரோஸ் வாட்டர் பல வழிகளில் பயன்படுத்தலாம். என்னென்ன வழிகள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
 

அந்த காலத்தில் நம் சருமம் மற்றும் முக அழகிற்காக ரோஸ் வாட்டரை பயன்படுத்துவர். ஆனால் அதே சமயம் ரோஸ் வாட்டர் தினமும் முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி அநேகருக்கு உண்டு. நிச்சயமாக பயன்படுத்தலாம். குறிப்பாக ரோஸ்வாட்டரை சீரமாகவும், டோனராகவும் தினமும் முகத்தில் பயன்படுத்தினால் பல நன்மைகளை பெறலாம்.

ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:

  • சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. 
  • இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.
  • முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. 
  • ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பரு, பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. 
  • அதே போல் ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.
  • சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் பண்புகள் ரோஸ் வாட்டரில் உள்ளன. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. 
  • தவறான வாழ்க்கை முறை காரணமாக முகம் மற்றும் கண்களுக்கு கீழே அடிக்கடி வீக்கம் ஏற்பட தொடங்குகிறது.ரோஸ் வாட்டரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் உள்ள வீங்கிய பகுதிகளில் தடவ வேண்டும்.

இதையும் படிங்க: ஆற்றலுக்கும் ஊக்கத்திற்கும் இதோ NightWalker-ன் எனர்ஜி டிரிங்ஸ்'

ரோஸ் வாட்டர் பயன்:

  • முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதன் மூலம் முகம் வயதானது போல் காட்சியளிப்பதை குறைக்கலாம். இது சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கோடுகளை குறைக்கவும் உதவுகிறது.
  • சிலருக்கு வெயிலில் செல்லும் போதும் முகம் சிவப்பாக மாறிவிடும். இதை ஆங்கிலத்தில் சன் பர்ன் என அழைப்பார்கள். ரோஸ் வாட்டரில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சன் பர்ன் வருவதை தடுத்து அதை குறைக்க உதவுகிறது. 
  • தோல் நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ-ரேடிக்கல்களின் விளைவை குறைக்கவும் ரோஸ் வாட்டர் உதவுகின்றன.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை குறைக்க ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைக்கவும். இப்படி செய்வதால் கருவளையங்களை குறைக்கலாம்.
  • எனவே, உங்கள் முகம் மற்றும் சருமத்தை அழக்காக நீங்களும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம்.
click me!