உங்கள் கண்கள் ஆரோக்கியம் பெற வேண்டுமா? அப்போ இந்த ஜூஸ் கண்டிப்பா குடிங்க...,!!

By Kalai Selvi  |  First Published May 25, 2023, 11:28 AM IST

வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பது கண்களுக்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஏன் என்பதை இப்பதிவில் காணலாம்.


கோடை காலத்தில் வெள்ளரிகாய் சாப்பிடுவது அல்லது அதனை ஜூஸ் செய்து குடிப்பது மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம். தோல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஈரப்பதம் முக்கியமானது. கண்களுக்கு வெள்ளரிக்காய் பயன்படுத்துவது சுருக்கங்களைக் குறைக்கும். மேலும் வீக்கத்தைக் குறைக்கவும், தோல் நிறமியை மேம்படுத்தவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காய் இருந்தால் போதும் உங்கள் முகம் பளீச்சென்று மாறிவிடும்.

உங்கள் முகத்தை சுத்தம் செய்த பின்னரே வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைக்க வேண்டும். ஏனெனில் நீடித்த பாக்டீரியாக்கள் நோய் தொற்றுக்கான ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
அது போலவே ஒருமுறை உபயோகித்த வெள்ளரி துண்டுகளை மீண்டும் உபயோகிக்க கூடாது. மேலும் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெள்ளரிகளைப் பயன்படுத்தலாம்.

Latest Videos

undefined

இதில் நச்சுத்தன்மை குறைவாக இருந்தாலும், அலர்ஜி இருப்பவர்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்த கூடாது. வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு பயன்படுத்தும் போது எவ்வளவு நன்மைகளை கிடைக்கிறதோ, அதே நன்மைகள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கும் போதும் கிடைக்கும். குறிப்பாக உங்கள் முகம் சுத்தமாகவும்,  புத்துணர்ச்சியாக இருக்க வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடிப்பது நல்லது.

இதையும் படிங்க: ரோஜா இதழ் போல வறண்டு வெடித்த உதடுகளை மாற்றணுமா? கற்றாழை ஜெல்.. 1 துளி தேன் போதும்!! சூப்பர் டிப்ஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ் செய்யும் முறை:

முதலில் வெள்ளரிக்காயின் தொல்லை அகற்றி இரண்டு துண்டுகளாக வெட்டவும். பின் அதனை மிக்ஸ்யில் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனை அடுத்து வெள்லரிக்காய் சாறை வட்டிக்கட்டவும். சுவைக்கு சிறிதளவும் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கவும். இப்படி இயற்கையான முறையில் வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வந்தால் கருவளையம் மறையும், முகமும் பளீச்சீடும்.

click me!