உங்கள் சருமம் வெள்ளையாக மாறனுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க..!!

By Kalai SelviFirst Published May 24, 2023, 2:44 PM IST
Highlights

உங்கள் சருமத்தை வெள்ளையாக்கவும், முக அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதற்கு வெள்ளை பூசணி ஜூஸ் உதவுகிறது.

வெள்ளை பூசணி ஜூஸில் வைட்டமின் ஏ,சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

சருமத்தை வெள்ளையாக்கும் ஜூஸ்:

வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை இயற்கையாகவே பளபளக்க செய்கின்றன.

ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெள்ளை பூசணியை தோலுரித்து அதன் விதைகளை மட்டும் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் அதை மிக்ஸியில் அரைத்து, காட்டன் துணியால் ஜூஸை மட்டும் வடிக்கட்டி கொள்ளவும். இதனுடன் 
எலுமிச்சை சாறு அல்லது புதினா இலைகளை சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலன்களை தரும்.

ஆரோக்கிய நன்மைகள்:

  • வெள்ளை பூசணியில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. 
  • வெள்ளை பூசணி ஜூஸ், இரத்தத்தை சுத்திகரிக்கப்பதோடு உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. 
  • வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின்-பி2 ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஜூஸை குடிப்பதால் உடல் பலவீனமும் நீங்கும்.
  • வெள்ளை பூசணியில் 96% தண்ணீர் உள்ளது. மேலும் இது நார்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். 
  • நீர்ச்சத்து நிறைந்த வெள்ளை பூசணியை உட்கொள்வது செரிமானத்தை சீராக்குகிறது. 
  • அதே போல் உடல் எடையைக் குறைக்கவும் வெள்ளை பூசணி உதவுகிறது. 
  • வெள்ளை பூசணி ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. 
  • இதில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: ஆரோக்கியத்திற்கு சிறந்தது தாமரை!! என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!

எனவே, நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெள்ளை பூசணி ஜூஸை எடுத்து கொள்ளுங்கள். 

 

click me!