ரோஜா இதழ் போல வறண்டு வெடித்த உதடுகளை மாற்றணுமா? கற்றாழை ஜெல்.. 1 துளி தேன் போதும்!! சூப்பர் டிப்ஸ்

By Ma riya  |  First Published May 25, 2023, 7:50 AM IST

கோடைகாலத்தில் உதடுகள் வறட்சியுடன் காணப்படாமல் மென்மையாகவும், நீரேற்றமாகவும் இருக்க செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம். 


கோடை வந்தாலே உடலில் வெப்பம் அதிகமாகும். அதிகமாக வியர்வை வெளியேறும். உடலில் நீரிழப்பு ஏற்படுவதன் காரணமாக நம்முடைய சருமம் ஈரப்பதத்தை இழக்கும். உதடுகளும் வறண்டு வெடித்து காணப்படும். தரிசு நிலம் போல வெடித்த உதடுகளில் வலியும் ஏற்படும். இதை தவிர்த்து உதடுகளை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு கற்றாழை மாஸ்க் உதவும். கற்றாழை ஜெல்லில் நீரேற்றமாக வைத்திருக்கும் பண்புகள் உள்ளன. இதை உதட்டில் பயன்படுத்துவது உங்கள் உதடுகளை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். உதடு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் மென்மையான, இளஞ்சிவப்பு நிற உதடுகளை பெறலாம். 

கற்றாழை ஜெல் லிப் மாஸ்க்:  

  • கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
  • தேன் ஆகிய இரண்டு பொருள்கள் போதும். 

Tap to resize

Latest Videos

undefined

செய்முறை:

கற்றாழையை எடுத்து அதிலுள்ள ஜெல்லை பிரித்து கொள்ளுங்கள். இந்த ஜெல்லை கரண்டியால் நன்றாக மசிக்கவும். இதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை உதடுகளில் பூசினால் வறண்ட உதடுகளும் மென்மையாக ஈரப்பதமாக மாறும். 

கவனம் 

கற்றாழை ஜெல் லிப் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன் உதடுகளை நன்கு சுத்தம் செய்யவும். பின்னர் உதடுகளில் தயார் செய்த தேன், கற்றாழை ஜெல் கலவையை பூச வேண்டும். இதை 15 நிமிடங்களுக்குப் பிறகு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் உதடுகளை கழுவி சுத்தம் செய்யவும். இப்படி 2 முதல் 3 முறை செய்தால் நல்ல பலனைப் பெறலாம். உங்கள் உதடுகள் மென்மையாகத் தெரிய ஆரம்பிக்கும். 

இதையும் படிங்க: தரித்தரம் நீங்கி வீட்டில் செல்வ வளம் பெருக! இந்த 1 பொருளை வீட்டில் வைத்தால் போதும்!!

click me!