எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அதனை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச் வினோத் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
24
ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ்
ஜனநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், மமீதா பைஜூ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம். இப்படத்தோடு சினிமாவை விட்டு விலகுகிறார் விஜய். இதன்பின்னர் அரசியலில் முழு நேரமாக ஈடுபட உள்ளார் விஜய்.
34
ஜனநாயகன் ட்ரெய்லர் வெளியீடு
விஜயின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நாளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதற்கு முன்னதாகவே மற்றும் ஒரு சரவெடி அப்டேட்டை ஜனநாயகன்பட குழு வெளியிட்டு இருந்தது. அது என்னவென்றால் படத்தின் டிரைலர் வெளியீடு தான்.
ஜனநாயகன் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு பக்கா ட்ரீட்டாக இருக்கும் என்பது ட்ரெய்லர் மூலமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், காமெடி, சென்டிமெண்ட் என முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக ஒரு பக்கா கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் வினோத் என்பது ட்ரெய்லர் மூலமே நிரூபனம் ஆகிறது. ஜனநாயகன் ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.