நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நலன் குமாரசாமி, அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் வா வாத்தியார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
24
வா வாத்தியார் ரிலீஸ்
வா வாத்தியார் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இம்மாதம் 5-ந் தேதியே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரஜினி பிறந்தநாள் அன்று வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ராஜ்கிரண், கருணாகரன், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், ஜிஎம் சுந்தர், ரமேஷ் திலக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
34
வா வாத்தியார் டிரெய்லர் ரிலீஸ்
வா வாத்தியார் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் பணியாற்றி உள்ளார். மேலும் படத்தொகுப்பு பணிகளை வெற்றிகிருஷ்ணன் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பாடல்களை விவேக், முத்தமிழ், கெழுத்தி, துரை ஆகியோர் எழுதி உள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த டிரெய்லரை நடிகர் சூர்யா தான் வெளியிட்டார். அதோடு படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் சூர்யா.
வா வாத்தியார் டிரெய்லரை பார்க்கும் போது இது ஒரு ஃபேண்டஸி கலந்த காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரெய்லரில் கவனம் ஈர்க்கும் காட்சிகள் எதுவும் இல்லாததால், இது நடிகர் கார்த்திக்கு மற்றுமொரு ஜப்பான் ஆக அமைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். மற்றொருவர் போட்டுள்ள பதிவில், வா வாத்தியார்... இன்னொரு ஜப்பான் போல தோணுது.. பாப்போம் எதனா கிளிக் ஆகுமானு என பதிவிட்டுள்ளார். கங்குவா தோல்விக்கு பின் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ரிலீஸ் ஆகும் படம் இது என்பதால் இப்படத்தை அவர் மலைபோல் நம்பி இருக்கிறார்.