அடுத்தவன் ஃபீலிங்ஸ கிரிஞ்சா பாக்குறது தான் இப்ப டிரெண்டே... டியூட் படத்தின் அதகளமான டிரெய்லர் இதோ

Published : Oct 09, 2025, 12:10 PM IST

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள டியூட் திரைப்படத்தின் லவ் மற்றும் ஆக்‌ஷன் கலந்த டிரெய்லர் வெளியாகி வைரலாகிறது.

PREV
14
Dude Movie Trailer

இயக்குநராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் பிரதீப் ரங்கநாதன். பெரும் வரவேற்பைப் பெற்ற 'லவ் டுடே' படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்த இவர், அதற்கு முன்பே 'கோமாளி' படத்தையும் இயக்கியுள்ளார். லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க அறிமுகமான பிரதீப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டையாடியது. டிராகன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து கொடுக்க தயாராகிவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

24
தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகும் டியூட்

அவர் ஹீரோவாக நடித்துள்ள டியூட் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரனின் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் சாய் அபயங்கர். அவர் இசையில் இதுவரை வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

34
டியூட் டிரெய்லர் ரிலீஸ்

இந்த நிலையில் டியூட் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று ரிலீஸ் செய்துள்ளது. இந்த டிரெய்லர் மூலம் இது ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த பக்காவான கமர்ஷியல் படம் என்பது உறுதியாக தெரிகிறது. இதில் பிரதீப்பும் மமிதாவும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்துகிறார்கள். அவர்கள் இடையே காதல் மலர்கிறது. மமிதாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் பிரதீப், ஆனால் மமிதாவுக்கு திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. இதையடுத்து என்ன ஆனது என்பதை லவ், ஆக்‌ஷன் டிராமா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.

44
டிரெய்லர் எப்படி இருக்கு?

பிரதீப் ரங்கநாதனுக்கு இதற்கு முந்தைய படங்களில் பெரியளவில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஆக்‌ஷனில் பின்னி பெடலெடுத்துள்ளார். அவரை கிண்டலடிக்கும் டயலாக்கும் டிரெய்லரில் இடம்பெற்று இருக்கிறது. இந்த உடம்ப வச்சிட்டு சண்டைக்கு போறியே... உன்னால் பத்து பேர் வந்தாலும் சமாளிக்க முடியுமா என மமிதா கேட்க, அதற்கு அவர், 100 பேர் வந்தாலும் என்னால சமாளிக்க முடியும் என பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார். இதனால் இந்த வருட தீபாவளிக்கு பக்கா ட்ரீட் ஆக டியூட் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories