தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தான் கூலி. விக்ரம், லியோ, மாஸ்டர் போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான், தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர், இதுதவிர தமிழ் நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் என மல்டிஸ்டாரர் படமாக இந்த கூலி உருவாகி இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
24
கூலி படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு
கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் - அனிருத் கூட்டணி என்றாலே அதில் பாடல்கள் பட்டாசாய் இருக்கும். அந்த வகையில் கூலி படத்திலும் இதுவரை வெளியான மூன்று பாடல்களுமே ஹிட் அடித்துள்ளன. அதிலும் மோனிகா பாடல் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்துள்ளது. அப்பாடலுக்கு நடிகர் செளபின் சாஹிர் உடன் நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ், இயக்கிய விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், தற்போது கூலி படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார்.
34
கூலி டிரெய்லர் ரிலீஸ்
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதன் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், தற்போதே கூலி படத்தின் புரமோஷன் வேலைகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த வண்ணம் உள்ளார். இந்த நிலையில், கூலி படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி கூலி திரைப்படத்தின் மாஸான டிரெயிலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
ரஜினியின் அதிரடி சரவெடியாய் வெளியான கூலி டிரெய்லர்
கூலி படத்தின் டிரெய்லரில் ஆரம்பம் முதல் மாஸ் காட்சிகள் நிரம்பி உள்ளது. டிரெய்லரில் நாகர்ஜுனா, செளபின் சாஹிர், அமீர்கான் ஆகியோர் அடங்கிய காட்சிகள் முதலில் நிரம்பி இருக்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக எண்ட்ரி கொடுக்கிறார் ரஜினி. இந்த வயதிலும் மாஸான ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களை அடிச்சு துவம்சம் செய்திருக்கிறார். கடைசியாக தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பையும் ரஜினி வெளிப்படுத்தி இருப்பது தெரிகிறது. இதனால் இப்படம் பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் ஆக இருக்கும் என்பது டிரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது. இந்த டிரெய்லர் யூடியூபில் செம வைரலாகி வருகிறது.