நல்லா ஓடுற சீரியலுக்கு திடீரென எண்ட் கார்டு போடும் சன் டிவி... இன்னும் 20 எபிசோடு தான் பாக்கி இருக்காம்..!

Published : Sep 01, 2025, 01:13 PM IST

400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிரபல சன் டிவி சீரியல் இம்மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளதாம். அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Sun TV Serial End Soon

சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் சீரியலகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது டிஆர்பியிலும் சக்கைப் போடு போட்டு வருவது சன் டிவி சீரியல்கள் தான். அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல்களின் பட்டியலில் சன் டிவி தொடர்கள் தான் அதிகளவில் இருக்கும். அப்படி வார வாரம் டாப் 10 டிஆர்பி ரேஸில் இடம்பிடிக்கும் பிரபல சீரியலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாம் சன் டிவி. அந்த சீரியல் கிளைமாக்ஸை எட்டிவிட்டதாகவும், அதற்கு இன்னும் 20 எபிசோடுகள் தான் பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

24
முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்

அந்த சீரியல் வேறெதுவுமில்லை... இராமாயணம் தான். இந்த சீரியல் கடந்த ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 400 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இராமாயணம் ஒரு டப்பிங் சீரியலாக இருந்தாலும் அதன் விறுவிறுப்பான கதைக்களத்தால் சக்கைப்போடு போட்டு வந்தது. டிஆர்பி ரேஸில் இடம்பிடித்த முதல் டப்பிங் சீரியல் என்கிற பெருமையையும் இராமாயணம் சீரியல் பெற்றிருந்தது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு இராமாயணம் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளனர்.

34
20 எபிசோடு தான் உள்ளது

இராமாயணம் சீரியல் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இன்னும் 20 எபிசோடு தான் பாக்கி உள்ளதாம். இதனால் இம்மாதம் அந்த சீரியலுக்கு எண்ட் கார்டு போட உள்ளது சன் டிவி. இராமாயணம் சீரியல் முடிவுக்கு வர உள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்து வந்தது. கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேஸிலும் டாப் 10க்குள் வந்து மாஸ் காட்டி இருந்தது இராமாயணம் சீரியல், தற்போது அந்த சீரியல் முடிவடைய உள்ளதால், இனி 6.30 மணி ஸ்லாட்டில் என்ன தொடர் ஒளிபரப்பாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

44
இராமாயணம் சீரியலுக்கு பதில் என்ன?

இராமாயணம் சீரியல் முடிவடைய உள்ளதால் அதற்கு பதில் புது சீரியல் அந்த நேரத்தில் ஒளிபரப்பப்படுமா அல்லது மதிய நேர சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டு அவை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கெல்லாம் சன் டிவி தான் விடை கொடுக்க வேண்டும். சன் டிவியில் ஏற்கனவே மதிய நேர சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அதன் நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் ஏதேனும் புத்தம் புது சீரியல்களை களமிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அது என்ன சீரியல்? யார் நடித்தது? போன்ற விவரங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories