பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் இருவரும் சைலண்டாக தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை செய்து முடித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டது மட்டுமின்றி அந்நிகழ்ச்சி மூலம் தங்கள் காதலை உலகத்துக்கே சொன்ன ஜோடி தான் அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண் பிரசாத். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் தான் இந்த அரிய நிகழ்வு நடந்தது. அந்நிகழ்ச்சி முடிந்ததுமே அருண் - அர்ச்சனாவின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல மாதங்களாக இருவருமே திருமணம் பற்றி வாய் திறக்காமல் சைலண்டாக இருந்து வந்த நிலையில், தற்போது தங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருப்பதாக அருண் பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
24
அருண் பிரசாத் - அர்ச்சனா நிச்சயதார்த்தம்
இன்ஸ்டாகிராமில் அர்ச்சனாவுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் அவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருவரும் திருமணம் எப்போது என்கிற தகவலை இதுவரை வெளியிடவில்லை. திருமண நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தி முடித்துள்ளார். அதுவும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இவர்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டுள்ளார்கள்.
34
காதல் கதை
அருண் பிரசாத் - அர்ச்சனா இருவரும் விஜய் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்கள். அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதேபோல் அருண் பிரசாத், பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த இரண்டு சீரியல்களையும் பிரவீன் பென்னட் தான் இயக்கினார். ஆரம்பத்தில் நட்புடன் பழகி வந்த அருண் - அர்ச்சனா நாளடைவில் காதலிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் இவர்களின் காதல் வெளிச்சத்துக்கு வந்தது. இவர்கள் இருவருமே பிக் பாஸில் கலந்துகொண்டார்கள்.
அதன்படி அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து, டைட்டிலையும் வென்றார். பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் என்கிற சாதனையையும் அர்ச்சனா படைத்திருந்தார். அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்து வந்தாலும், போகப் போக முத்துக்குமரன் உடன் சண்டை போட்டு தன்னுடைய பெயரை கெடுத்துக்கொண்டார். இருப்பினும் இறுதியில் இவர்கள் இருவரும் நண்பர்களாகினர்.