விஜய் டிவியில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சி 10வது ஆண்டாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் விருது வென்றவர்கள் யார்.. யார் என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவி சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இளசுகளை கவரும் வண்ணம் உள்ளதால் அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்களை கெளரவிக்கும் விதமாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் விருது வென்றவர்கள் யார்... யார்? எந்தெந்த சீரியலுக்கு அதிக விருதுகள் கிடைத்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
விஜய் டெலிவிஷன் விருதுகள்
பேவரைட் ஜோடிக்கான விஜய் டெலிவிஷன் விருதை மகாநதி தொடரின் டிரெண்டிங் ஜோடியான விஜய் - காவேரி வென்றுள்ளனர். அதேபோல் வளர்ந்து வரும் ஜோடிக்கான விருது, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் ராஜியாக நடிக்கும் ஆகாஷ் மற்றும் ஷாலினிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சிறந்த காமெடியனுக்கான விருது நடிகர் அம்பானி சங்கருக்கு கிடைத்திருக்கிறது. தங்கமள் சீரியலுக்காக அவர் இவ்விருதை வென்றிருக்கிறார். அதேபோல் சிறந்த ரைட்டருக்கான விருது பிரியா தம்பிக்கு கிடைத்துள்ளது. அய்யனார் துணை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களுக்காக இவ்விருதை வென்றுள்ளார்.
35
பெஸ்ட் ஹீரோ - ஹீரோயின் யார்?
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, விஜய் டெலிவிஷன் விருதுகளிலும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. அதன்படி சிறந்த ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கான விருதை அந்த சீரியலில் முத்து - மீனாவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதிப் பிரியா வென்றிருக்கிறார்கள். அதேபோல் சிறந்த இயக்குனருக்கான விருதையும் சிறகடிக்க ஆசை சீரியல் டைரக்டர் குமரன் வென்றுள்ளார். மேலும் இந்த சீரியலில் கிரிஷ் என்கிற கேரக்டரில் நடித்த அஸ்வின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த சீரியலுக்கான விருதையும் சிறகடிக்க ஆசை தான் வென்றிருக்கிறது.
விஜய் டிவியில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் நான்கு விருதுகளை தட்டிதூக்கி உள்ளது. அதன்படி ஆண்களில் Find of The Year விருதை அரவிந்த் சேஜுவும், பெண்களில் Find of The Year விருதை மதுமிதாவும் வென்றிருக்கிறார்கள். இதுதவிர சிறந்த கதாபாத்திரமாக அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் முன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இறுதியாக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அய்யனார் துணை சீரியலின் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.சரவணன் வென்றிருக்கிறார். இவர் இவ்விருதை வெல்வது இது மூன்றாவது முறை ஆகும்.
55
மற்ற விருதுகள்
அதிக நாட்கள் ஓடிய பாக்கியலட்சுமி சீரியலுக்கும் விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காமெடி ஷோவுக்கான விருதை குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த குடும்பத்திற்கான விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டீமுக்கு கிடைத்துள்ளது. பெஸ்ட் பாட்டி விருதை வி.ஆர்.திலகம் வென்றிருக்கிறார். சிறந்த மகன் விருதை சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனும், சிறந்த மருமகள் விருதை அந்த சீரியலின் நாயகி ஸ்வேதாவும் வென்றிருக்கிறார்கள். சிறந்த காமெடி ஜோடிக்கான விருதை புகழ் மற்றும் குரேஷி வென்றுள்ளனர்.